திருமறையில் யார் இவர் யாரோ? - 113
எப்பனெத்: முன்னோடியாகவும் சாட்சியாகவும் திகழுதல்
1. பெயர்:
எப்பனெத் Epaenetus
2. அர்த்தம்:
புகழப்படத்தக்கவர் Praiseworthy
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16:5 – ஆசியாவில் கிறிஸ்துவுக்கு முதற்பலனாகவும், பவுலுக்குப் பிரியமானவருமாக இருந்த முதன்மைச் சீடர்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• எப்பனெத், ஆசியா மாகாணத்தில் (இன்றைய துருக்கி பகுதி) அப்போஸ்தலனாகிய பவுலின் ஊழியத்தின் மூலமாக முதன்முதலில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நபர் (ஆசியாவின் முதற்கனி) ஆவார்.
• இவர் ரோமாபுரி சபைக்கு பவுல் நிருபம் எழுதும்போது, அங்கே வாழ்ந்து வந்ததாகக் கருதி பவுல் இவரைப் பிரியத்தோடு வாழ்த்துகிறார்.
• ஆரம்பகால திருச்சபை பாரம்பரியத்தின்படி (Church Tradition), இவர் பிற்காலத்தில் கார்த்தேஜ் (Carthage) பகுதியின் பிஷப்பாக (கண்காணியாக) சேவை செய்தார் என்றும் கூறப்படுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஆசியா மாகாணத்திலேயே முதன்முதலில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட எப்பனெத், தனக்குப்பின் வந்த திரளான விசுவாசிகளுக்கு ஒரு சிறந்த முன்னோடியாக (Role Model) விளங்கினார்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments