நோக்கம்
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளை முழுமையாகப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் தனித்துவமான மொழி அடையாளத்தை ஆதரிப்பது இதன் முதன்மை நோக்கமாகும்.
சைகை மொழிகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை உலகளவில் பரப்புவதாகும்.
சைகை மொழிகளை அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிப்பதையும், கல்வியிலும் பொது இடங்களிலும் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. சிறப்பு
1951-ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று உலக செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் (World Federation of the Deaf - WFD) தொடங்கப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைப்பின் தொடக்க நாளை நினைவுபடுத்தும் வகையிலும், அதன் பங்களிப்பைக் கெளரவிக்கும் வகையிலும் ஐக்கிய நாடுகள் சபை (UN) செப்டம்பர் 23-ஆம் தேதியை உலக சைகை மொழி தினமாக அறிவித்தது.
முதல் உலக சைகை மொழி தினம் 2018-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
3. எப்படி அனுசரிப்பது கொண்டாடுவது?
அடிப்படை சைகைகளைக் கற்றல்: அன்றாட வாழ்வில் பயன்படும் எளிய சைகை மொழி வார்த்தைகள் அல்லது எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்குவது.
விழிப்புணர்வு பரப்புதல்: சமூக வலைதளங்களில் சைகை மொழியின் முக்கியத்துவம் மற்றும் தகவமைப்பு உரிமைகள் (Accessibility) பற்றிய விழிப்புணர்வுப் பதிவுகளைப் பகிர்வது.
அமைப்புகளுக்கு ஆதரவு: செவித்திறன் சவால் கொண்ட மக்களின் நலனுக்காகவும், சைகை மொழி வளர்ச்சிக்கும் பாடுபடும் உள்ளூர் மற்றும் தேசிய அமைப்புகளுக்கு ஆதரவளிப்பது அல்லது தன்னார்வலராகப் பணியாற்றுவது.
அனைவருக்குமான சூழலை உருவாக்குதல்: பொதுநிகழ்ச்சிகள், காணொளிகள் மற்றும் நிறுவனப் பணிகளில் சைகை மொழி பெயர்ப்பாளர்களைப் (Sign Language Interpreters) பயன்படுத்துவதை ஊக்குவிப்பது.
மேயேகோ
9486810915

0 Comments