Ad Code

பிலெகோன் Phlegon Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 123
பிலெகோன்: கிறிஸ்துவுக்காக பிரகாசித்தல்

1. பெயர்:  
பிலெகோன் Phlegon

2. அர்த்தம்: 
எரிகிறவர் / பிரகாசிக்கிறவர் / ஜொலிக்கிறவர் (Burning / Blazing)

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
• ரோமர் 16.14
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் இறுதியில் வாழ்த்துப் பெறும் இறைப்பணியாளர்களில் ஒருவராகப் இடம்பெறுகிறார். 

4. வரலாற்றுக் குறிப்புகள்
• இவர் முதலாம் நூற்றாண்டில் ரோமாபுரிச் சபையில் இருந்த ஒரு உண்மையுள்ள விசுவாசி.
• சபை பாரம்பரியங்களின்படி (Church Tradition), இவர் இயேசு கிறிஸ்துவால் நியமிக்கப்பட்ட எழுபது சீடர்களில் (Seventy Disciples) ஒருவர்.
• இவர் மாரத்தான் (Marathon) பகுதியின் ஆயராக (Bishop) சேவை செய்து, சுவிசேஷத்திற்காகப் பல பாடுகளைச் சகித்துச் சாட்சியாய் வாழ்ந்து மரித்தார் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பிலெகோன் என்ற பெயரின் பொருளுக்கேற்ப (எரிகிறவர்), கிறிஸ்துவுக்காகவும் சுவிசேஷத்திற்காகவும் நாம் எப்போதும் ஆவியில் அனலுள்ளவர்களாகவும் பிரகாசிக்கிற விளக்குகளாகவும் வாழ வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Tamil Christian Messages
Daily Devotion Tamil
Bible History Tamil
Today's Bible Verse Tamil
Tamil Daily Devotion

Post a Comment

0 Comments