Ad Code

புதுப்பிக்கும் மிஷ்பாத் Mishpat that Revives Mishpat Series 10 /2026

சங்கீதம் 119 எழுதப்பட்ட காலத்தில், அதை எழுதிய சங்கீதக்காரர் தீயோரின் துன்புறுத்தலுக்கும், அநீதிக்கும், கடுமையான சோதனைகளுக்கும் ஆளாகியிருந்தார் (வசனம் 157: "என்னைத் துன்புறுத்துகிறவர்களும் எனக்கு விரோதிகளும் அநேகர்").

அக்காலகட்டத்தில் உலக நீதி மற்றும் அதிகார வர்க்கத்தின் தீர்ப்புகள் அவருக்கு எதிராக இருந்தன. மனிதர்களின் சட்டமும் அதிகாரமும் அவரை ஒடுக்கியபோது, அவர் இறைநீதியான தீர்ப்பை (மிஷ்பாத்) நோக்கித் தன் கண்களை ஏறெடுத்தார். அதாவது, சங்கீதக்காரர் பின்வருமாறு ஜெபித்தார்:

"ஆண்டவரே! உம் இரக்கம் மிகப்பெரியது; உம் நீதித்தீர்ப்புகளின்படி (மிஷ்பாத்) எனக்கு வாழ்வளியும் (சாயா)"
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:156.
 
1. மிஷ்பாத் (Mishpat):
   அக்கால மன்னர்களும் தலைவர்களும் அநீதியான தீர்ப்புகளை வழங்கி ஏழைகளையும் கடவுளுக்குப் பயந்தவர்களையும் ஒடுக்கினர். எனவே, சங்கீதக்காரர் உலக மனிதர்களின் நீதியை நம்பாமல், கடவுளின் நீதியான, சீர்ப்படுத்தும் 'மிஷ்பாத்தை' நாடினார்.

மனிதர்களின் சட்டமும் அதிகாரமும் அவருக்கு எதிராகச் செயல்பட்டபோது, அவர் மனித நீதியை நம்பாமல் கடவுளின் உண்மையான நீதியான தீர்ப்பை (மிஷ்பாத் - Mishpat) தஞ்சமாகக் கொண்டார்.
 
2. சாயா (Chayah):
   எபிரேய மொழியில் 'சாயா' (Chayah - חָיָה) என்னும் மூல வினைச்சொல்லானது (Phonetic: khaw-yaw') பிழைத்தல், உயிரோடு இருத்தல், புதுப்பித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. வேதாகமத்தில் இச்சொல் உயிரோடே காப்பாற்றுதல், ஜீவனைக் கொடுத்தல், பாதுகாத்தல், குணமாக்குதல், பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துதல் மற்றும் கடவுள் மனித ஜீவனைக் காப்பாற்றிப் புதுப்பித்தல் போன்ற காரியங்களைக் குறிக்கப் பயன்படுகிறது.

எதிரிகளின் அச்சுறுத்தலாலும் துயரத்தாலும் அவருடைய ஆத்துமா சோர்வடைந்து, மரண வேதனைக்கு நிகரான சூழலில் இருந்தது. உலக நீதி அவரை அழிவை நோக்கித் தள்ளியபோது, கடவுளுடைய இரக்கமும் நியாயமும் மட்டுமே தன்னைப் புதுப்பித்து வாழவைக்கும் (சாயா) என்று விசுவாசித்தார்.

அதாவது, நாம் வாழும் இந்த உலகத்தில் உலக நீதி தண்டிப்பதிலும் பழிவாங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், மிஷ்பாத் மனிதனைச் சீர்ப்படுத்தி, புதுப்பித்து வாழவைக்க (சாயா - Chayah) முயல்கிறது.

இந்த இறைநீதி நம்மையும் புதுப்பிக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம். கடவுள் நம்மோடு!!!

மேயேகோ
9486810915
அக்டோபர் 2026

தமிழ் கிறிஸ்தவ செய்தி (Tamil Christian Message)
கிறிஸ்தவ தியானம் (Christian Devotion)
இயேசுவின் செய்தி (Jesus Message)
மேயேகோ பிரசங்கங்கள் (Meyego Sermons)

Post a Comment

0 Comments