Ad Code

எழுத்தாளர் ஜெயமோகன் கூற்றுக்கு மறுப்பு: ஏமி கார்மைக்கேல் பற்றிய உண்மைகள்! Truth about Emy CarMichael

‘தெய்வநாயகி’ நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னவை:

1. ஏமி கார்மைக்கேல் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; அவர் சுமார் 60 பேரை மட்டுமே மீட்டிருந்தார் என்று குறிப்பிட்டார்.

2. அன்றைய தேவதாசிப் பெண்களை ஏமி கார்மைக்கேல் ‘விபச்சாரிகள்’ என்று குறிப்பிட்டார் என்றும், அதுவே இன்றளவும் நமது பொதுப்புத்தியில் நிலவுகிறது என்றும் பேசினார்.

3. மேற்கொண்டு வந்த அந்த மீட்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை அக்காலகட்டத்தில் இருந்த சக மிஷனரிகளே எதிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏமி கார்மைக்கேல் (Amy Carmichael) குறித்துக் கூறியக் கருத்துகளுக்கான மறுப்பு:

1. குழந்தைகள் மீட்பு (1,500+): 60 பேர் அல்ல; 1901-1951 வரை 1,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்டெடுக்கப்பட்டனர். அவர் மறையும்போது ஆச்சிரமத்தில் 900+ குழந்தைகள் இருந்தனர்.

2. தேவதாசி ஒழிப்பு: ஏமி தேவதாசிகளை இழிவுபடுத்தவில்லை, குழந்தை நேர்ச்சையையே எதிர்த்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தனது தேவதாசி ஒழிப்பு மசோதாவுக்கு ஏமியின் தரவுகளையே முதன்மைச் சான்றாகப் பயன்படுத்தினார்.

3. மிஷனரிகளின் ஆதரவு: பிரிட்டிஷ் சட்டச் சிக்கல்களுக்கு அஞ்சியே மிஷனரி அமைப்புகள் தயங்கின; அதனால் ஏமி 'தோனாவூர் கூட்டமைப்பை'த் தனியாகத் தொடங்கினார். தாமஸ் வாக்கர், டாக்டர் ஹோவர்ட் சோமர்வெல் போன்றோர் அவருக்கு இறுதிவரை உறுதுணையாக இருந்தனர்.

ஆதாரமற்றக் கூற்றுகளைத் தவிர்த்து வரலாற்று உண்மைகளைப் போற்றுவோம்!

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments