Ad Code

ஸ்தாக்கிஸ் • Stachys Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 117
ஸ்தாக்கிஸ்: அன்பினால் கட்டப்படும் ஆன்மீக உறவு

1. பெயர்:  
ஸ்தாக்கிஸ் • Stachys

2. அர்த்தம்: 
தானியக் கதிர் Ear of grain

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16:9
கிறிஸ்துவுக்குள் உடன்வேலையாட்களான உர்பானுக்கும், பவுலுக்குப் பிரியமான ஸ்தாக்கிஸுக்கும் (ஸ்தாக்கு) தெரிவிக்கப்படும் அன்பான வாழ்த்து.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஸ்தாக்கிஸ் முதல் நூற்றாண்டு ரோமாபுரி திருச்சபையில் வாழ்ந்த ஒரு முக்கியக் கிறிஸ்தவர்.
• இவர் சுவிசேஷப் பணியில் உண்மை உள்ளவராகச் செயல்பட்டு, ஆரம்பகால திருச்சபையின் எழுபது சீடர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
• அப்போஸ்தலனாகிய பவுல் இவரை "எனக்குப் பிரியமானவன்" (My beloved) என்று அன்போடு குறிப்பிடுகிறார்.
• பண்டைய திருச்சபை மரபுகளின்படி (Church Tradition), இவர் அப்போஸ்தலனாகிய அந்திரேயாவின் சீடராக இருந்தவர்.
• பின்னர் பைசாண்டியத்தின் (Byzantium இன்றைய இஸ்தான்புல்) முதல் ஆயராக (Bishop) நியமிக்கப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பவுல் ஸ்தாக்கிஸை வெறும் உடன் ஊழியராக மட்டும் பார்க்காமல், "எனக்குப் பிரியமானவன்" என்று ஆழமான ஆன்மீக அன்போடு அழைக்கிறார். கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியத்திலும் திறமைகளையும் பணிகளையும் விட, தேவ அன்பினால் பிணைக்கப்பட்ட உறவுகளும், ஒருவரையொருவர் நேசிக்கும் சுபாவமுமே உண்மையான பலத்தைத் தருகின்றன என்பதை இவரது வாழ்க்கை நமக்குக் கற்பிக்கிறது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments