இது ரோமன் கத்தோலிக்கத் திருவிவிலியம் அடிப்படையில் உள்ளது.
1) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய புத்தகம் எது?திருப்பாடல்கள் (150 அதிகாரங்கள்)
2) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய புத்தகம் எது?
ஒபதியா (1 அதிகாரம்)
3) பழைய ஏற்பாட்டின் மத்திய புத்தகம் எது?
நீதிமொழிகள்
4) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 119 (176 வசனங்கள்)
4) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 117 (2வசனங்கள்)
5) பழைய ஏற்பாட்டின் மத்திய அதிகாரம் எது?
யோபு 29
6) பழைய ஏற்பாட்டின் முதல் வசனம் யாது?
தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்த பொழுது.... (தொநூ1:1)
7) பழைய ஏற்பாட்டின் கடைசி வசனம் யாது?
நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்." (மலா4:6)
8) பழைய ஏற்பாட்டின் மத்திய வசனம் யாது?
2குறிப்பேடு 20:17,18
9) பழைய ஏற்பாட்டின் மிகப்பெரிய வசனம் யாது?
தமிழ் விவிலியம்: தானியேல் 5:23
ஆங்கில விவிலியம்: எஸ்தர் 8:9
10) பழைய ஏற்பாட்டின் மிகச்சிறிய வசனம் யாது?
தமிழ் விவிலியம்: யோபு 36:1
ஆங்கில விவிலியம்: 1 குறிப்பேடு 1:25
11) பழைய ஏற்பாட்டின் முதல் புத்தகம் எது?
தொடக்கநூல்
12) பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகம் எது?
மலாக்கி
13) பழைய ஏற்பாட்டின் நீளமான பெயர் என்ன?
மகேர் சாலால் கஸ்பாசு (எசா8:1)
14) முக்காலத்தையும் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) உணர்த்தும் திருப்பாடல்கள் யாவை?
திருப்பாடல்கள் 21, 22, 23
15) இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டைப் பெறுவது குறித்துக் கூறும் புத்தகம் எது?
யோசுவா
16) விவிலியத்தின்படி இறக்காதவர்கள் யார்?
1. ஏனோக்கு (தொநூ5:22-24)
2. எலியா (2அர2:11)
17) மிகுந்த ஞானியாகத் திகழ்ந்தவர் யார்?
சாலமோன் (1அர3:9-13)
18) மிகுந்த சாந்தகுணமுள்ளவர் யார்?
மோசே (எண்12:3)
19) மிக உயரமான மனிதன் யார்?
கோலியாத் (1சாமு17:4)
20) பூமியில் அதிக வருடங்கள் வாழ்ந்தவர் யார்?
மெத்துசேலா - 969 ஆண்டுகள் (தொநூ5:27)
21) ஆபத்து காலத்தில் ஆண்டவரை அழைக்கும் தொலைபேசி எண் எனக் குறிப்பிடப்படும் வசனம் யாது?
ஆண்டவரின் தொலைபேசி எண் எனக் குறிப்பிடப்படும் எண்: 333
"என்னிடம் மன்றாடு; உனக்கு நான் செவிசாய்ப்பேன்; நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்" (எரே33:3).

0 Comments