சீகேமே சீகேமே
நீ தான் பிரபு ஆயிச்சே! உனக்குத்தான் உன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மை இருக்கிறதே!! நீ கேட்டால் உன் பட்டணத்தில் பெண் கொடுப்பார் எவரும் இல்லையோ!! உன் குடும்பத்தில் வரம் வைக்க ஜனகூட்டம் வாசல் படியில் காத்து கிடக்குமே!! உனக்குத்தான் சொந்தங்களும் பந்தங்களும் உண்டே!! சொத்துக்களும் தான் ஏராளம் உண்டே!!
எல்லாம் இருந்தும் தீனாளினால் தீட்டுபட்டாய்!! தீக்கரையாக்கபட்டாய்!!
ஏன் இந்த அவசரம்!! ஏன் இந்த விபரீத முடிவு!!கொஞ்சம் கொஞ்சமாக அவள் உன் உயிரை காவு வாங்கினாலோ...
ஏன் உன் மனம் அவள் மீது பட்சம் கொண்டது!! ஏன் உன் மனம் அவளுக்காய் இவ்வளவு பறிதவித்தது!!
ஏன் உன் நேசம் கீழ்த்தரமாய் போனது!!
சீகேமே சீகேமே இப்போ எல்லாம் போனதே போனதே!!
நீ செய்த தவறினால் இப்பொழுது உன் குடும்பத்தினரோ, அகதிகளாய் அடிமைகளாய்!!
ராஜ பரம்பரை இப்பொழுது அடிமையாய் மாறினது உன் ஆசையினாலே!!
உன் சொந்தங்களும் உன் வீட்டு செல்ல பிள்ளையும் இப்பொழுது ஆட்டை மேய்க்கிறது!! இதையா எதிர்பார்த்தாய் என் பிரபுவே!! என் மேன்மையானவனே!! இப்பொழுதும் ஒரு தருணம் கிடைத்தால் உன் குடும்பத்திற்காய் உன் தவறை திருத்தி கொள்வாய்யோ!!சீகேமே சீகேமே
இப்போ எல்லாம் போனதே போனதே!!
சிந்தனைக்கு:
Prepared by
Mr. Aravind
Theological Student, UBS
0 Comments