Ad Code

சர்வதேச குடும்ப தினம் | International Family Day | மே 15 May

"நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்பார்கள். குடும்ப அமைப்பு சமூகத்தின் முக்கிய அங்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 15-ந் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

1993-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை ‘சர்வதேச குடும்ப தினம்’ தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகில் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1994 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடும்ப அமைப்பின் ஸ்திரத்தன்மையையும் கட்டமைப்பையும் பாதிக்கும் மாறிவரும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் சர்வதேச குடும்ப தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இன்றைக்கு குடும்ப வாழ்வில் கூட்டுறவு என்பது குறைந்து கொண்டே போகிறது. குடும்பமாக செல்ஃபி எடுத்து போடும் பலரின் வாழ்வில், குடும்பமாக அமர்ந்து, மனம்விட்டு பேசி சாப்பிட்டு மகிழ்ந்த தருணங்கள் இருக்கின்றதா என்பது இந்த நவீன உலகில் கேள்விக்குறியே... குடும்பம் என்பது "கடவுளின் பரிசு" என்பதை மறந்துபோய் விடக்கூடாது.

குடும்பமாக சேர்ந்து வாழுங்கள்...
குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள்....
குடும்பமாக இறைவனைத் தேடுங்கள்....
இல்லத்தில் இறையாட்சி மலரட்டும்!!!!


Post a Comment

0 Comments