1. ஆரம்பகால மிஷனரிகளின் வருகை
தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிறிஸ்தவம் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வேரூன்றத் தொடங்கியது. கத்தோலிக்க மிஷனரிகள் முதலில் இங்கு கால் பதித்தனர். குறிப்பாக கோட்டாறு மற்றும் புன்னக்காயல் பகுதிகளிலிருந்து வந்த மிஷனரிகள் குற்றாலம் மற்றும் தென்காசி மலைப்பகுதிகளில் நற்செய்திப் பணிகளைச் செய்தனர்.
2. CMS மிஷன்
தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சியில் CMS (Church Missionary Society): அமைப்புகள் பெரும் பங்காற்றின சி.டி.இ. ரேனியஸ் (C.T.E. Rhenius): "திருநெல்வேலியின் அப்போஸ்தலர்" என்று அழைக்கப்படும் ரேனியஸ், தென்காசிப் பகுதிகளில் பல சபைகளை நிறுவினார். இவருடைய காலத்தில் தான் அடித்தட்டு மக்களுக்குக் கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு வழங்கப்பட்டது.
3..SPG மிஷன்
தென்காசி மாவட்டத்தின் வளர்ச்சியில் SPG (Society for the Propagation of the Gospel அமைப்புகள் பெரும் பங்காற்றின. இந்த அமைப்பு புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ளூர் திருச்சபைகளை வலுப்படுத்தியது.
3. கல்வி பணிகள்
மிஷனரிகள் வரும் வரை கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. தென்காசி, சுரண்டை போன்ற இடங்களில் மிஷனரிகள் பள்ளிகளைத் தொடங்கினர். சுரண்டையில் உள்ள CMS பெண்கள் பள்ளி இப்பகுதியில் பெண் கல்வியை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.
5. சமூகப் புரட்சி
தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராக மிஷனரிகள் குரல் கொடுத்தனர். குமரி மாவட்டத்தில் தொடங்கிய தோள்சீலைப் போராட்டத்தின் தாக்கம் தென்காசிப் பகுதிகளிலும் எதிரொலித்தது. மிஷனரிகளின் ஆதரவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறத் தொடங்கினர். வறுமையில் வாடிய மக்களுக்கு மிஷனரிகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தனர். திருச்சபையைச் சுற்றியே குடியிருப்புகள் அமைக்கப்பட்டதால், அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வு கிடைத்தது.

0 Comments