முகவுரை
இறைமைந்தன் இயேசுகிறிஸ்துவின் திருப்பெயரில் அன்பின் வாழ்த்துகள். இறைவன் நமக்குக் கொடுத்தப் பரிசுகளில் மிக முக்கியமான ஒன்று திருமறை என்னும் பரிசுத்த வேதமே. சங்கீதம் 119.18 இல் வாசிக்கிறோம். "உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்." வேதம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் மூலபதமான தோரா (Torah) என்பதின் அர்த்தம் திருச்சட்டம். அதிசயம் என்பதற்கு எபிரேயத்தில் பாலா (pala) என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. "Wonderful spiritual truths that lie hidden, even under the very simplest precepts of God's Law."
1. பார்க்கக்கூடிய அதிசயங்கள்
சங்கீதம் 119.18 ".....நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்." இறையதிசயங்களை நாம் பார்க்க வேண்டுமென்றால், நம்முடைய கண்கள் திறக்கப்பட வேண்டும். இது நம் மாம்சத்தால் முடியாத காரியம்; சத்திய ஆவியாரால் கூடக்கூடிய காரியம் என்பதை உணர்த்துகிறது. "This is a simple but powerful prayer for spiritual illumination, asking God by His Spirit to remove the scales from our natural, spiritually blind eyes, that we might see and receive supernatural truth. Spiritual truth cannot be apprehended in a natural way, but requires a supernatural means." திருமறையைத் தியானிக்க இறை உதவியை எப்போதும் நாடுவோம். அதிசயங்களை காண்போம்.
2. தியானிக்கக்கூடிய அதிசயங்கள்
சங்கீதம் 119. 27 "உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும், அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்." "Make me understand the way of Your precepts, So that I will meditate (focus my thoughts) on Your wonderful works" (Amplified Bible). திருச்சட்டம் என்பது இறைக் கட்டளைகளை உள்ளடக்கியது. நமக்கு கட்டளைகள் கசப்பாக தெரியலாம். ஆனால், சங்கீதக்காரன் அந்தக் கட்டளைகளின் வழிகள் உணர்த்தப்படும் போது, ஆண்டவரின் அதிசயங்களை சிந்தித்துத் தியானிப்பதாக சொல்லுகிறார். ஆண்டவர் நமக்கு தரும் கட்டளைகளுக்குள் அதிசயங்கள் இருக்கிறது. அதை உணரும் போது, அனுபவிக்க முடியும்.
3. கைக்கொள்ளக்கூடிய அதிசயங்கள்
சங்கீதம் 119.129 "உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள், ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்." சங்கீதம் 119இல் இறை வார்த்தையைக் குறிக்கும் வண்ணம் வரும் இன்னொரு வார்த்தை தான் "சாட்சிகள்." "The wonderful character of the word a reason for obedience. So wonderfully pure, just, balanced, elevating. So much for our own benefit, for the good of society, and for the divine glory." ஆண்டவரின் சாட்சிகளை கைக்கொள்ள நாம் அழைக்கப்படுகின்றோம். ஏனென்றால், அவரின் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை.
நிறைவுரை
"The Bible itself is an astonishing and standing miracle" - J. MacLagan. திருமறையே அதிசயம் என்றால் அதிலுள்ள அதிசயங்களை நம்மால் கிரகிக்கக் கூடாது. ஆகவே, சங்கீதக்காரனைப் போல, "உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்." என்று ஜெபித்து, இறையதிசயங்களைப் பார்ப்போம், தியானிப்போம், கைக்கொள்ளுவோம். இறையாசி நம்மோடிருப்பதாக.
1 Comments