(முடியவே முடியாது)
1. பரிசுத்தமில்லாமல் தரிசிக்கமுடியாது
எபிரெயர் 12:14(1-17) யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்
களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத்
தரிசிப்பதில்லையே மத்தேயு 5:8; வெளிப். 22:4; எண்ணாகமம் 24:17
2. விசுவாசமில்லாமல் பிரியமாயிருக்கமுடியாது
எபிரெயர் 11:6(1-40) விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது
கூடாத காரியம் அப்போஸ்தலர் 6:8 ஸ்தேவான்; அப்போஸ்தலர் 11:24 பர்னபா;
ரோமர் 4:19,21 ஆபிரகாம்; அப்போஸ்தலர் 16:5 விசுவாசத்தினால் சபைகள்
பெருகின; எபிரெயர் 10:38; ஆபகூக் 2:4 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்.
3. வெறுக்காவிட்டால் சீஷனாயிருக்கமுடியாது
லூக்கா 14:33 (25-35) உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளை
யெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
யோவான் 12:25 தன் ஜீவனை வெறுக்கிறவன்; பிலிப்பியர் 3:8,11,12 அவருக்காக
எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்
4.நிலைத்திராவிட்டால் கனிதர முடியாது
யோவான் 15:4 கொடியானது திராட்சசெடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க்
கனி கொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால்,
கனிகொடுக்கமாட்டீர்கள். ரோமர் 11:22
5. மனந்திரும்பாவிடில் பிரவேசிக்கமுடியாது
மத்தேயு 18:3 நீங்கள் மனந்திரும்பி பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் மாற்கு 10:15; லூக்கா 18:17; யோவான் 3:3,5(1-8)
6. இயேசு அல்லாமல் போகமுடியாது
யோவான் 14:6(1-14) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலே
யல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
7. இயேசு அல்லாமல் செய்யமுடியாது
யோவான் 15:65(1-14) நானே திராட்சச்செடி நீங்கள் கொடிகள்; என்னாலேயல்லாமல்
உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
0 Comments