Ad Code

சிலுவையும் மீட்கும் கிறிஸ்துவும் • Cross and Redeeming Christ • 26/3/2023 CSI Tirunelveli Diocese

1. ஞாயிறு குறிப்புகள்
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் இரண்டாம் ஞாயிறு
தேதி: 26/03/2023
வண்ணம்: கருநீலம்
திருமறை பாடங்கள்:
யோபு 42:10-17
மாற்கு 10:46-52
கொலோசெயர் 1:9-21
சங்கீதம்: 126

2. திருவசனம் & தலைப்பு
சிலுவையும் மீட்கும் கிறிஸ்துவும்
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. கொலோசெயர் 1:20 (பவர் திருப்புதல்)
சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார். கொலோசெயர் 1:20 (திருவிவிலியம்)


3. ஆசிரியர் & அவையோர்
கொலோசெயர் கடிதம் ஆனது திருத்தூதர் பவுலால் எழுதப்பட்டது ஆகும். பவுல் கொலோசே பட்டணத்திலுள்ள கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும், கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற சகோதரர்களுக்கு எழுதுகிறார். (கொலோசெயர் 1:1;4:18). இந்த கடிதத்தை எழுதும் பொழுது அவரோடு இணைந்து ஊழியம் செய்த உத்தம குமாரனாகிய திமோத்தேயுவை அங்கிகரிக்கும் வண்ணமாக அவருடைய பெயரையும் சேர்த்து எழுதுகிறார் மற்றும் இந்த கடிதம் கொலோசெ பட்டணத்தில் உள்ள விசுவாசிகளிடத்தில் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா திருச்சபையில் வாசிக்கப்பட வேண்டும் என்று பவுல் அறிவுறுத்துகிறார். (கொலோசெயர் 2: 1; 4:16). இந்த திருச்சபையானது புறஜாதி மக்கள் அதிகமாகவும், யூத மக்கள் குறைவாகவும் கொண்ட ஒரு திருச்சபை ஆகும்.

 4. எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை
பவுல் தன்னுடைய சிறையிருப்பின் காலத்தில் நன்கு கடிதங்களை எழுதினார் என்று சொல்லப்படுகிறது அவை எபேசியர், பிலிப்பியர், பிலமோன், மற்றும் கொலோசெயர் ஆகிய கடிதங்கள் ஆகும். இவையாவும் “The Pauline prison Epistles” என்று அழைக்கப்படுகிறது. வேத வல்லுநர்கள் இந்த கொலோசெயர் கடிதம் ஆனது பவுலின் சிறையிருப்பின் காலத்தில் அதாவது கிபி 61 Or 62-ம் ஆண்டுகளில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். (Act 28:30-31, Col 4:10,18).

கொலோசெ பட்டணம் ஆனது சின்ன ஆசியாவில் உள்ள ஒரு வளர்ந்து வந்த ஒரு பட்டணமாகும், இப்போது இந்த பட்டணம் துருக்கி நாட்டில் இருக்கிறது. பவுல் எபேசுவிலே மூன்று ஆண்டுகள் (Act 20:31) தங்கி ஊழியம் செய்த பொழுது எப்பாப்பிரா பவுலின் நற்செய்தியினால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவர் ஆனார் என்றும் அவர் முலமாக கொலோசெ பட்டணத்தில் திருச்சபை தோன்றியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ( Col 1:7-8; 4:12 Act 19:10). மற்றும் எப்பாப்பிரா அல்லது பவுலின் மூலம் மனம் திருந்தியவர்கள் சிதறி போய் லவோதிக்கேயா மற்றும் எராப்போலியாவிலும் திருச்சபையை நிறுவிய இருக்கலாம் என்று வேத வல்லுநர்கள் சொல்கிறார்கள்.(Col 4:13)

இந்த கடிதத்தை பவுல் எழுதுவதற்கான நோக்கம் கொலோசெ திருச்சபையில் குழப்பத்தை உண்டாக்க கூடியதாக காணப்பட்ட மாறுபட்ட உபதேசங்களான ஞானவாத தத்துவ கொள்கை மற்றும் யூத கொள்கைகள் ஆகும். குறிப்பாக பாரம்பரிய சடங்குகள், உடலை வறுத்துவது, வானதூதர் வழிபாடுகளை செய்வது, மனித ஞானத்தின் மீதும், கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைப்பது ஆகும். இவற்றை கடைப்பிடித்தால் மட்டும் ஞானத்தை அடைந்து மீட்பை பெறலாம் என்று போதிக்கப்பட்டது. இது கிறிஸ்துவின் மீட்பையும், கிறிஸ்துவின் உண்மையையும், தன்மையும் (CHRISTOLOGY) மறுக்க கூடியதாக இருந்தது. (கொலோ 2:8,11,21-23) எனவே பவுல் அந்த துர்உபதேசத்தை கண்டித்தும், கிறிஸ்து தான் எல்லாவற்றிலும் மேலானவர், முதன்மையானவர், என்றும், சகலமும் அவர் மூலமாக தான் படைக்கப்பட்டது (Include All Visible And Invisible Things and All Authority) என்றும், கிறிஸ்து தான் எல்லாவற்றுக்கும் முந்தினவர் என்றும் சொல்லுகிறார். (கொலோ 1:15-20) கிறிஸ்து சிலுவையில் நமக்காக மரித்து உயிர்த்தெழுந்தார் அவரை விசுவாசிக்கிற நாமும் அவரோடு கூட எழுப்பப்படுவோம் என்றும். எனவே நாம் உலகத்தின் ஞானத்திற்கும், உலகத்தின் வழிபாடுகளுக்கும், பூமியிலுளவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வைத்திருக்கிற மேலானதை தேட வேண்டும், மற்றும் பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று பவுல் அறிவுரை கூறுகிறார். (கொலோ 2: 20; 3:1-2).

5. திருவசன விளக்கவுரை
கொலோ 1 ம் அதிகாரம் 15 முதல் 23ம் வசனம் வரை பவுல் இயேசு கிறிஸ்துவே எல்லாவற்றிக்கும் முதன்மையானவர் ( THE SUPREMACY OF CHRIST) என்று சொல்லுகிறார். 20 ம் வசனம் ஆனது எதை மையப்படுத்துகிறது என்றால் கடவுளுக்கும் இந்த உலகம் மற்றும் விண்ணகத்திற்கும் இருந்த பிளவை அல்லது பகையை கிறிஸ்துவின் சிலுவை பாடுகள், இரத்தம் சிந்துதல், சிலுவையின் மரணம் மற்றும் மரணத்தின் மீது கிறிஸ்து வெற்றிக்கொண்டதின் மூலமாக கடவுள் தாம் படைத்த எல்லவற்றையும் (All Things Means Include whole Creation on Earth and Heaven) மீட்டுக்கொண்டு. கடவுளுக்கும் அவர் படைத்த அணைத்து படைப்புகளுக்கும் இருந்த பிளவை கிறிஸ்து சிலுவையில் சிந்திய ரத்தத்தினால் சமாதானத்தை உண்டாக்கி, எல்லாவற்றையும் ஒப்புரவாக்கினார். ஒப்புரவாக்கினார் என்பதற்கு ஆங்கிலத்தில் “RECONCILE” என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் “katallasso” என்று அழைக்க படுகிறது. இதற்கு பொருள் என்ன என்றால் “The Process of Restoration”. கடவுளுக்கும், அவரால் படைத்த அனைத்து படைப்புகளுக்கும் இருந்த பிளவை கிறிஸ்துவின் மூலமாக சரி செய்கிறார் அல்லது இழந்து போனதை மீண்டும் கிறிஸ்துவின் சிலுவை தியாகத்தினால் புதுப்பிக்கிறார் அல்லது சீரமைக்கிறார் என்பதாகும்.

6. இறையியல் மற்றும் வாழ்வியல்
கிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி நம்மை மீட்டிருக்கிறார். கிறிஸ்துவுக்குள் சகல ஞானம், அறிவு ஆகியவை அடங்கியிருக்கிறது. அவரே சகல ஞானத்திற்கும் காரணர். எனவே நாம் உலகத்தின் ஞானத்தின் படியும் அறிவின் படியும் நம்முடைய வாழ்க்கையை வளர்த்துக்கொண்டு . கிறிஸ்து மகிமையில் நமக்காக வைத்திருக்கும் பந்தய பொருளை இழந்து போகாமல் அவர் நமக்கு தந்திருக்கின்ற மீட்பின் உண்மையான அர்த்தத்தை புரிந்தவர்களாக, அவருக்கும், அவருடைய வசனத்திற்கும் கீழ்ப்படிந்து, அவரின் சாயலை பெற்றவர்களாக பரிசுத்தமாக வாழ வேண்டும் என்று ஆண்டவர் அழைப்பு கொடுக்கிறார். 

7. அருளுரை குறிப்புகள்
      சிலுவையும் மீட்கும் கிறிஸ்துவும்
1. மன்னிப்பு
கிறிஸ்து, சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நம் பாவத்தை மன்னித்து மீட்டார் . (கொலோ 1: 13,14; 2:13).
2. சமாதானம்
 கிறிஸ்து, சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி நம்மை மீட்டார் . (கொலோ 1: 19,20;3:11)
3. ஒப்புரவாகுதல்
கிறிஸ்து, சிலுவை மரணத்தில் ஒப்புரவாக்குதலின் மூலம் நம்மை மீட்டார் (கொலோ 1: 21; 2: 14,15).

எழுதியவர்
திரு. G. ஜெபஸ்டின்
சபை ஊழியர், கீழச் சுரண்டை சேகரம் 

Post a Comment

0 Comments