Ad Code

மேயேகோ திருமறை ஞாயிறு தேர்வு • Meyego Scripture Sunday Exam


அன்பானவர்களே... அன்பின் வாழ்த்துகள்... அட்வெந்து காலம் கிறிஸ்துவ காலண்டரின் துவக்க காலம். அட்வெந்து இரண்டாம் ஞாயிறு திருமறை ஞாயிறாக ஆசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு "மேயேகோ திருமறை ஞாயிறு தேர்வு" (Meyego Scripture Sunday Exam) நடத்த முயற்சிக்கிறோம். இது இன்னும் அனைவரின் வேத தியானத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். 

விதிமுறைகள்

1. பரிசுத்த வேதாகமத்தில் முதல் 5 புத்தகங்கள் (ஆதியாகமம்- உபாகமம்) முழுவதும் மட்டும். கேள்வி - பதில் முறையில் வினாக்கள் இருக்கும்.

2. டிசம்பர் 08 ஆம் தேதி (திருமறை ஞாயிறு) இந்த meyego வலைதளத்தில் கேள்விக்கான லிங்க் ஷேர் செய்யப்படும். டிசம்பர் 10 (செவ்வாய்) ஆம் தேதி இரவு 12 மணி வரை ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பலாம்.

3. நீங்கள் லிங்க் மூலம் டவுன்லோட் செய்யும் pdf இலுள்ள வினாக்களுக்கு ஒரு பேப்பரில் பதில் எழுதி ஃபோட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். ஒரே ஒரு முறை மட்டுமே ஒரு நபர் ஃபோட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.

4. சரியாக எழுதியவர் மற்றும் பங்கு பெற்றோர் என்று "இரண்டு விதத்தில் பரிசுகள்" உண்டு. குலுக்கல் முறையில் 2 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

5. முழு மதிப்பெண்கள் பெறாவிட்டாலும், நீங்கள் அனுப்பினால் பங்கு பெற்றோருக்கான பரிசு குலுக்கல் முறையில் உண்டு. ஆகவே நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். 

6. அனுப்ப வேண்டியவை:
    பதில் எழுதிய பேப்பர் ஃபோட்டோ
    உங்கள் பெயர்
    ஃபோன் எண் அல்லது இமெயில் ஐடி
    முழு முகவரி.

7. அனுப்ப வேண்டிய முறை
    வாட்ஸ்அப் எண் - 9486900915
                  அல்லது
     இமெயில் - meyegoofficial@gmail.com 

பதிவு கட்டணம் ஏதும் இல்லை. முடிந்தவரை பாராமல், கூகுள் மற்றும் மற்றவரின் உதவியின்றி உங்கள் வேத அறிவை சோதித்துப் பார்க்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள். இறையாசி உங்களோடிருப்பதாக. ஆமென்.
   

Post a Comment

0 Comments