Ad Code

உம் வேதத்தை நேசிப்போர்க்கு • Women's Fellowship

உம் வேதத்தை நேசிப்போர்க்கு மிகுந்த சமாதானம் உம் வேதத்தை நேசிப்போர்க்கு வாழ்க்கையில் இடறல் இல்லை வேதத்தை நேசிப்போர்க்கு.....

1.எஸ்றா வேதத்தை ஆராயவும் வேதத்தின்படி செய்யவும் நீதி நியாயத்தை பிரசங்கிக்கவும் இருதயத்தை பக்குவப்படுத்தினான் பூரண சமாதானம் பெற்றுக்கொண்டான் - 4 -உம் வேதத்தை

2. பெரோயா பட்டணத்தார் மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்று கொண்டார்கள் தினம் தோறும் வேதத்தை ஆராய்ந்தார்கள் நற்குணசாலியாய் மாறினார்கள்

வாழ்க்கை சாட்சியாய் திகழ்ந்தது -(4)-உம் வேதத்தை

3.கற்பனை கவனித்தால் நலம் நலமே கண்டும் கேட்டதை செய்யுங்கள் சந்ததி மணல்தனை போலவும் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பீர்கள் உன் சமாதானம் நதியை போலாகும் - (4) - உம் வேதத்தை

4.வேதத்தை மறவேன் ஒருபோதும் வேதம் என் மகிழ்ச்சி எப்போதுமே வேதம் என் தியானமே அவர் வார்த்தை என்னை வழிநடத்தும் வேதத்தை நேசிப்பேன் - (4) - உம் வேதத்தை

Post a Comment

0 Comments