Ad Code

ஆபகூக்: களிகூருதலின் ஜெபம் • Habakkuk Prayer

தவக்கால தியானம்: 30
தலைப்பு: ஆபகூக்: களிகூருதலின் ஜெபம்
வேதபகுதி : ஆபகூக் 3

வேதாகம நபர் குறிப்பு 
ஆபகூக் தீர்க்கதரிசி

விளக்கவுரை 
ஆபகூக் தீர்க்கதரிசியும் தேவனும் பேசிக் கொள்கின்றனர். ஆபகூக் தேவனிடம் முறையிடுகிறார் நான் எதுவரைக்கும் கூப்பிடுவேன் நீ கேளாமல் இருப்பீர் கொடுமையினாலே நான் கூப்பிடுவேன் நீ இரட்சியாமல் இருக்கிறீரே. நியாயப்பிரமாணம் பலனற்றதாகி நியாயம் ஒருபோதும் செல்லாமல் போகிறது என சொல்லி தேவனிடம் கேள்வி கேட்கிறார் அதற்கு தேவன் கல்தேய ஜாதியரை வேகமாக எழும்ப பண்ணுவேன். அவர்கள் குதிரைகள் சிவிங்கிகள் ஓநாய் கழுகுகளைப் போல தீவிரித்து வருவார்கள்.

பின்னும் ஆபகூக் தேவனை நோக்கி தீமையை பார்க்க மாட்டாத சுத்த கண்ணணே அநியாயத்தை நீர் நோக்கி கொண்டிருக்க மாட்டீரே பின்னை ஏன் துரோகிகளை நோக்கி கொண்டிருக்கிறீர் துன்மார்க்கன் நீதிமானை விழுங்கும் போது ஏன் மௌனமாய் இருக்கிறீர். நான் என் காவலிலே தரித்து அவர் எனக்கு
 என்ன சொல்வார் என்றும், நான் அதற்கு என்ன மறுஉத்தரவு சொல்வேன் என்றும் கவனித்து பார்ப்பேன் ஆனால் நீரோ கேளாதவர் போல் இருக்கிறீர்.

பின்னும் தேவன் பிரதியுத்தரமாக "நீ தரிசனத்தை எழுதி பலகையில் தீர்க்கமாக வரை, முடிவிலே அது விளங்கும் அது பொய் சொல்லாது அது தாமதித்தாலும் அதற்கு காத்திரு அது நிச்சயமாய் வரும் அது தாமதிப்பதில்லை". தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். பின்னும் தேவன் நீ சிந்தின மனுஷ இரத்தத்தின் நிமித்தமும் உன்னை கொள்ளை இடுவார்கள். உன் ஆத்துமாவுக்கு விரோதமாய் பாவம் செய்தாய்." கல்லு சுவரில் இருந்து கூப்பிடும் உத்திரம் மச்சியிலிருந்து சாட்சியிடும்" என்று கூறினார்.

பின்பு ஆபகூக் தீர்க்கதரிசி ஒரு ஜெபத்தை ஏறெடுக்கிறார் கர்த்தாவே நீ வெளிப்படுத்தினதை நான் கேட்டேன் எனக்கு பயம் வந்தது. வருஷங்களின் நடுவிலே அதை விளங்க பண்ணும் நீர் கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். தேவனுடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது அவர் துதியினால் பூமி நிறைந்தது. அவருடைய பிரகாசம் சூரியனைப் போல் இருந்தது என்னை சிதறடிப்பதற்கு பெருங்காற்றை போல வரும் பொழுது நீர் அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவ குத்தினீர். "அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சை செடிகளில் பழம் உண்டாகாமல் போனாலும் ஒலிவ மரத்தின் பலனற்று போனாலும் வயல்கள் தானியங்களை விளைவியாமல் போனாலும் கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்று போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமல் போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என் இரட்சிப்பின் தேவனுக்குள் நான் களிகூறுவேன்".

கற்றுக் கொள்ளும் பாடம்
ஆபகூக் தீர்க்கதரிசி இடம் நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், தேவன் அவருக்கு தீர்க்கதரிசனமாக உரைத்ததை ஆபகூக் தீர்க்கதரிசி முழுமையாக விசுவாசித்து அதற்காக ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார் அந்த ஜெபம் தான் கலி களிகூருதலின் ஜெபம் இரண்டு முறை தேவனிடம் மன்றாடி அவர் வேண்டிக் கொண்டாலும் தேவன் சொல்லும் தீர்க்கதரிசனத்தை முழுமையாக விசுவாசித்து ஒரு ஜெபத்தை ஏறெடுத்தார். அதேபோல நாமும் இந்நாளில் தேவனை முழுமையாக நான் நம்புவோம் நாமும் களிகூருதலின் ஜெபத்தை ஏறெடுப்போம்.

எழுதியவர்,
நிக்சன் ஐசக் ராஜா
Co ordinated by,
SMC Youth Fellowship

Post a Comment

0 Comments