Ad Code

திருப்பாடல் தியானம் 27 • யாருக்குப் பயப்படுவேன்? • Psalm 27

திருப்பாடல் தியானம் 27 
யாருக்குப் பயப்படுவேன்?

சங்கீதம் 27 சவுல் அல்லது அப்சலோம் போன்ற எதிரிகளிடமிருந்து தப்பி ஓடும்போது அல்லது பிற தனிப்பட்ட துரோகங்களை எதிர்கொள்ளும்போது பயமின்றி, இறை நம்பிக்கையோடு தாவீது பாடிய பாடலாகும். 

ஆபத்து மற்றும் அவதூறுகளுக்கு மத்தியிலும் கடவுள் மீது நம்பிக்கையை கொண்டு, கடவுளின் முன்னிலையில் வாழ வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்துடன், அவருடைய வழிகாட்டுதலையும் தேடும் நோக்குடன் பாடியுள்ளார் தாவீது.

ஜீவனுள்ள தேசத்தில் கடவுளின் நன்மையைக் காண்பதில் விடாமுயற்சியையும் நம்பிக்கையையும் ஊக்குவிக்கிறது. அச்சமற்ற விசுவாசத்தின் அறிக்கைகளைக் கொண்ட சங்கீதம் இது. 

1. நம்பிக்கையாய் இருப்பேன்
2. ஆலயத்தில் இருப்பேன்
3. கர்த்தருக்குக் காத்திருப்பேன்

நாம் இந்த விசுவாச அறிக்கைகளைச் செயல்படுத்தி, பயமின்றி வாழ்வோம்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ 
9486810915

Post a Comment

0 Comments