கர்த்தருடைய சத்தம்
சங்கீதம் 29 தாவீது எழுதிய ஒரு பண்டைய எபிரேயப் பாடலாகும், இது இஸ்ரேலின் வரலாற்றின் ஆரம்பத்தில் (கி.மு. 10-12 ஆம் நூற்றாண்டு) கானானிய பாகால் வழிபாட்டிற்கு (Canaanite Baal worship) எதிரான ஒரு விவாதமாக இயற்றப்பட்டிருக்கலாம்.
இது ஒரு சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் மீது யாவேயை உச்ச ராஜாவாக சித்தரிக்கிறது, இயற்கையின் பிரமிக்க வைக்கும், குழப்பமான சக்தியை விவரிக்க "கர்த்தருடைய சத்தம்" ஏழு முறை பயன்படுத்துகிறது.
கானானிய புராணங்களில், இடி, மின்னல் மற்றும் மழையைக் கட்டுப்படுத்தும் புயல் கடவுள் பால் (Baal) ஆவார். சங்கீதம் 29, புயலுக்கு பாகால் அல்ல, யெகோவா கடவுளே கட்டளையிடுகிறார் என்பதைக் சுட்டிக்காட்டுகிறது.
ஆகவே, சர்வ வல்லமையுள்ள ஜெய கெம்பீர சத்தம் கொண்ட என்றென்றைக்கும் ராஜாதி ராஜாவாகிய நம் கடவுள் ஒருவர் மட்டுமே...
1. பெலன் கொடுப்பார்
2. சமாதானம் அருளுவார்
3. ஆசீர்வதிப்பார்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915

0 Comments