Ad Code

சிலுவை: கிருபையின் வெளிப்பாடு • Sunday Sermon CSI Diocese of Tirunelveli

1. ஞாயிறு குறிப்புகள்: 
ஞாயிறு: கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முன் வரும் 2ம்  ஞாயிறு.(லெந்து 5)
தேதி: 22-03-2026
வண்ணம்: ஊதா
திருமறை பாடங்கள்: 
பழைய ஏற்பாட்டு பகுதி: மீகா 7:15-20
நிருபவாக்கியம்: 1 பேதுரு 2: 17-24
நற்செய்தி பகுதி: மாற்கு 10: 46-52
சங்கீதம்: 31

2. திருவசனம் & தலைப்பு 
சிலுவை:  கிருபையின் வெளிப்பாடு
"நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்".  1 பேதுரு 2:24
திருவிவிலியம்: சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
Passion Sunday - A Sunday before Palm Sunday 
4. வசன குறிப்புகள்
ஆசிரியர்:
 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார் (1 பேதுரு 1:1).
அவையோர்: 
 பொந்து, கலாத்தியா, கப்படோசியா, ஆசியா மற்றும் பித்தினியா ஆகிய மாகாணங்களில் பரவி வாழ்ந்த கிறிஸ்தவர்கள். குறிப்பாக பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழக்கூடிய  கிறிஸ்துவை பின்பற்றக்கூடியவர்களுக்கு)பேதுரு எழுதுகிறார்.
எழுதப்பட்ட காலம் & சூழ்நிலை 
காலம்: சுமார் கி.பி. 62–64
அந்நேரத்தில் கிறிஸ்தவர்கள் சமூகத்திலும் அரசாங்கத்திலும் துன்பத்தையும் துன்புறுத்தலையும் எதிர்கொண்டனர். குறிப்பாக அடிமைகள் அநியாயமான எஜமான்களிடம் துன்பப்பட்டனர். இந்த நிலையில், விசுவாசிகள் எப்படி நீதியுடனும் கீழ்ப்படிதலுடனும் வாழ வேண்டும் என்று பேதுரு போதிக்கிறார்.

5. திருவசன விளக்கவுரை:
இந்த 2ஆம் அதிகாரம் விசுவாசிகளின் அடையாளத்தையும் வாழ்க்கை முறையையும் விளக்குகிறது: அவர்கள் “தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள், ராஜரீக ஆசாரிய கூட்டம்” என அழைக்கப்படுகிறார்கள். பாவ ஆசைகளைத் தவிர்த்து நல்ல செயல்களால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும். கிறிஸ்துவின் துன்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு, துன்பத்தில் கூட நீதியாக வாழ அழைக்கப்படுகிறார்கள்.
இந்த வசனம் ஏசாயா 53:5 ன் நிறைவேறுதலை மீண்டும் பேதுரு தெளிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது. 1 பேதுரு 2:24 வசனத்தில், கிறிஸ்து தாமே நம்முடைய பாவங்களைத் தமது உடலில் சிலுவையில் சுமந்தார் என்று பேதுரு குறிபிடுகிறார். ‘நம்முடைய பாவங்கள்’ என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, கிறிஸ்துவே அதைப் போக்கும் ஒரே காரணர் என காட்டப்படுகிறது. ‘சுமந்தார்’ என்பது பலியிடும் அர்த்தத்தையும், பாவத்தினால் வரும் தண்டனையை எடுத்துச் சென்றதையும் குறிக்கிறது; 

இது ஏசாயா 53:12-இன் நிறைவேற்றமாகும். இதன் நோக்கம், விசுவாசிகள் பாவத்திற்கு “இறந்தவர்கள்” ஆகி (பாவ வழ்வை வெறுக்கும் நிலை), நீதிக்காக புதிய வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதாகும். ஆகவே, கிறிஸ்துவின் பாடுகள் பாவமன்னிப்பை மட்டுமல்ல, பரிசுத்தமான வாழ்விற்கு மாற்றத்தையும் அழைக்கிறது. 

6. இறையியல் & வாழ்வியல் 
கிருபை என்பது தகுதி இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற தகுதி. இந்த தபசு காலத்தில் சிலுவை பற்றிய தியானங்களை அநேகம் நாம் தியானித்து வருகிறோம் இந்த சிலுவை யூதர்களால் அவமானச் சின்னமாக கருதப்பட்டாலும் இயேசுவினால் இந்த சிலுவை கிருபையின் அடையாளமாக, கிருபையின் தொடக்கமாக அமைகிறது. கிறிஸ்து தமது கிருபையை சிலுவையின் வழியாக வெளிப்படுத்துகிறார். இந்த சிலுவைபாடுகள் நாம் பாவங்களுக்கு மரித்து நீதித்து பிழைக்கும்படியான கிறிஸ்துவின் அன்பு நிறைந்த கிருபையின் வெளிப்படாகும். அவருடைய தழும்புகளால் குணமான புதிய வாழ்வு மற்றவர்களின் காயங்களை குணமாக்க நம்மை ஏறுகிறது.
 
நமக்காக கிறிஸ்து இயேசு சிலுவையிலே பாவங்களை சுமந்திருக்க இன்று நாம் மற்றவர்களின் பாரங்களை சுமக்கிறோமா? (கலாத்தியர் 6:2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்) மற்றவர்களின் கஷ்டங்கள், பலவீனங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான சுமைகளைத் தாங்கி, அன்பினால் உதவி செய்வோம். காயப்பட்டோரின் காயங்களை கட்டுவோம் இறை ஆட்சியில் அனைவரையும் இணைத்திடுவோம் கிருபை நம்மை வழிநடத்துவதாக ஆமென்.

7. அருளுரை குறிப்புகள்:
1. குறையாத கிருபை (மீகா 7:20)
2. குணமாக்கும் கிருபை (1 பேதுரு 2: 24பி)
3. குறைதீர்க்கும் கிருபை (மாற்கு 10:52)

எழுதியவர்
இம்மானுவேல் 
சபை ஊழியர். 


Post a Comment

0 Comments