Ad Code

உடன் பயணிக்கும் உயிர்த்த கிறிஸ்து • Christ who is Journey with us

1. ஞாயிறு குறிப்புகள் : கிறி.உயிர். திரு.பின் வரும் 3ம் ஞாயிறு 
தேதி :26/04/2026
வண்ணம் : வெள்ளை 
திருமறை பாடங்கள்
பழைய ஏற்பாடு:யாதிராகமம் 33:1-14
 நிருப வாக்கியம்: 2 தீமோத்தேயு 4 :1-11
 நற்செய்தி பகுதி: மாற்கு 14 : 43 -52

2. திருவசனம் & திருவசனத் தலைப்பு 
"உடன் பயணிக்கும் உயிர்த்த கிறிஸ்து" 
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
யாத்திராகமம் 33:14
திருவிவிலியம்: அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற,
விடுதலைப் பயணம் 33: 14

3. திருவசனத் தலைப்பு & ஞாயிறு தொடர்பு
கிறித்து உயிர்ப்பு திருநாள் தொடர் ஆசரிப்பு & தியானம்.

4. வசன குறிப்புகள்
நூலாசிரியர்: யாத்திராகமம் (Exodus) புத்தகத்தின் ஆசிரியர்  மோசே ஆவார்.

அவையோர்: வனாந்தரத்தில் இருந்த இஸ்ரவேல் மக்கள்

வசன பின்னணி: மோசே கர்த்தருக்காக சீனாய் மலையிலே காத்திருந்து நியாயப்பிரமாண பலகைகளை பெற்றுக் கொண்டார், ஆனால் அவர் மலையில் இருந்து இறங்கி வர தாமதிக்கிற போது இஸ்ரவேல் ஜனங்கள் ஆரோனிடத்தில் கூட்டம் கூடி மோசேக்கு என்ன சம்பவித்ததோ நாங்கள் அறியோம் நீர் எழுந்து எங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டு பண்ணும் என்று ஆரோனிடத்தில் வேண்டிக் கொண்டார்கள், ஆரோனும் ஒரு பொன் குட்டியை உருவாக்கி ஜனங்களை விழ பண்ணினார் எனவே இஸ்ரவேல் ஜனங்கள் மீது ஆண்டவருக்கு கோபம் மூண்டது வணங்கா கழுத்து உள்ள ஜனங்கள் என்று தேவன் அறிந்து அவர்களை அழிக்க சித்தமனார். ஆனாலும் மோசையின் வேண்டுதலினால் மீண்டுமாக அவர்களை வழிநடத்த ஆண்டவர் உதவி செய்கிறார் இஸ்ரவேல் ஜனங்கள் மனம் திரும்பிய பட்சத்தில் அவர்களுக்கு துணை நிற்கிறார்.

5. திருவசன விளக்க உரை
தேவன் மோசேயின் ஜெபத்திற்குப் பதில் அளிப்பவராக இந்த பகுதி காணப்படுகிறது.
இதை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்
1.என் சமுகம் (Presence)உனக்கு முன்பாக செல்லும் 
ஆண்டவர் மோசேக்கு கொடுத்த வாக்குத்தத்தமாக இது அமைகிறது, 
நான் மீண்டும் எந்தத் தூதனையும் அனுப்ப மாட்டேன்; நானே வருவேன்."
இஸ்ரவேல் ஜனங்களை இதுவரையில் மேகஸ்தம்பங்களும் அக்கினி சம்பவங்களும் பாதுகாத்து வந்த நிலையில் ஆண்டவர் தாமே இவர்களுக்கு முன்பாக நடந்து போவதாக, வழிநடத்துவதாக குறிப்பிடுகிறார்.
இது புதிய ஏற்பாட்டில் இயேசு நமக்கு அளித்த வாக்குத்தத்தத்தை போலவே அமைகிறது. (இயேசு, “நிச்சயமாக நான் எப்போதும் உங்களுடனே இருக்கிறேன்” என்று கூறுகிறார் மத்தேயு 28:20).

2. நான் உனக்கு இளைப்பாறுதல் (Rest) தருவேன் 
தேவனுடைய பிரசன்னம் என்பது வாழ்க்கையில் இளைப்பாறுதலையும் சமாதானத்தையும் தருகிறது. இது மோசேக்கும் இஸ்ரவேலுக்கும் தேவன் அளித்த ஒரு முக்கியமான மற்றும் அவசியமான பரிசாக காணப்படுகிறது.
இங்கே வாக்களிக்கப்பட்ட உண்மையான "இளைப்பாறுதல்" என்பது ஓய்வுநாளோ, அல்லது அவர்கள் கானானுக்குள் பிரவேசிப்பதோ அல்ல; மாறாக, அளவற்ற அன்பினால் அந்த இளைப்பாறுதலுக்கு தேவனுடைய சமுகம் (Presence)மனிதர்களை வழிநடத்துவதே" ஆகும்.

6. இறையியல் & வாழ்வியல்
என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என்ற வாக்குத்தத்தம்,
தேவன் ஆசீர்வாதங்களை மட்டும் அல்ல, தம்மையே நமக்கு தருகிறார் என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
பழைய ஏற்பாட்டில் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக நடந்து செல்கிறார், புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து நம்மோடு வாசம் பண்ணுகிறார், எனவே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் தேவன் நம்மோடு இருப்பதே அவர் சமுகம் நம்மோடு இருப்பதே தேவன் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்துகிறார் நம்மை பாதுகாக்கிறார் நமக்கு இளைப்பாறுதலை சமாதானத்தோடு தருகிறார்.

7. அருளுரை குறிப்புகள்
1. முன் செல்கிறார்
2. இளைப்பாறுதல் தருகிறார்

Post a Comment

0 Comments