Ad Code

மங்களம் செழிக்கக் கிருபையருளும் மங்கள நாதனே பாடல் வரலாறு • Song History

தேவாலயத்தில் மணமகனும் மணமகளும், "வாழ்விலும் தாழ்விலும் இணைந்து வாழுவோம்," என்று வாக்குக் கொடுத்து, இறையருள் வேண்டி நிற்கின்றனர். அப்பொழுது மங்களகரமாக ஒலிக்கும் பாடல் எது தெரியுமா?

"மங்களம் செழிக்கக் கிருபையருளும் மங்கள நாதனே" என்ற இப்பாடலே!

"இப்பாடல் பாடப்படாத கிறிஸ்தவத் திருமணமே தமிழ் உலகில் இல்லை," எனக் கூறலாம்! திருமண வைபவங்களில் அனைவரும் விரும்பிப் பாடும் இப்பாடலை இயற்றியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆவார்.

மங்களம் செழிக்க கிருபையருளும் மங்கள நாதனே
சரணம்
1. மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ,
எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீ,
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக்கத்தனாம் ஆபிராம் தேவ நீ,
                                            - மங்களம்
 
2. மங்கள மணமகன்.................க்கும்
மங்கள மணமகள்..................க்கும்
மானுவேலர்க்கும், மகானுபவர்க்கும்,
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே, உனை
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும்.
                                            - மங்களம்

Post a Comment

0 Comments