பவுலடிகளார் பயணத்தின்று பாடம் 06
ஜெப சிந்தை – ரோமர் 1:9

ரோமர்களுக்கு எழுதிய நிருபத்தை பவுல் தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின் இறுதியில் (கி.பி. 57 வாக்கில்) கொரிந்து நகரிலிருந்து எழுதினார். அவர் அதுவரை ரோமாபுரிக்குச் சென்றதில்லை. பவுல் தான் சந்திக்காத ரோமாபுரி விசுவாசிகளுக்காகவும் இடைவிடாமல் ஜெபித்ததை இந்த வசனம் உறுதிப்படுத்துகிறது. பிறருக்காக ஜெபிப்பதே பவுலின் பயண வெற்றிகளின் ரகசியம். பவுல் தான் பார்க்காத விசுவாசிகளுக்காகவும் ஜெபித்தார். அவரது பயணம் கால்களால் நடப்பதற்கு முன்பே ஜெபத்தால் ஆரம்பமானது.

1. உமது ஜெபப் பட்டியலில் உமக்குத் தெரியாத மக்களும் இருக்கிறார்களா
2. உமது செயல்களுக்கு தேவன் சாட்சியாய் இருக்க முடியுமா?
3. நம்முடைய அந்தரங்க ஜெப வாழ்க்கைக்கும், பொதுவான ஊழியத்திற்கும் தேவன் சாட்சியாய் இருக்க முடியுமா?

தூரத்தில் இருந்தாலும் ஜெபத்தால் பிறரைத் தாங்க முடியும். பயணங்களில் சந்தித்த துன்பங்களை ஜெபத்தின் மூலம் பவுல் வென்றார். பவுலைப் போல, நமது திட்டங்களை ஜெபத்தில் ஆரம்பித்து, பிறர் மீதுள்ள தேவ பாரத்தோடு பயணிக்க வேண்டும்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...

Lessons from Paul's Life Journey 
Acknowledgement 
Meyego