ஆத்தும பாரம் ரோமர் 9:2-3
பவுலடிகளாரின் ஆத்தும பாரத்தைப் பற்றிய வேதப்பகுதி தான் ரோமர் 9:2-3.
தன்னுடைய சொந்த ஜனங்களான இஸ்ரவேலர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததைக் கண்டு பவுல் அடைந்த வேதனையின் வெளிப்பாடு இது. தன் ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டுமானால், தான் கிறிஸ்துவை விட்டுப் பிரிக்கப்பட்டுச் சபிக்கப்படவும் அவர் தயாராக இருந்தார். இது ஏதோ ஒரு நேரத்து உணர்ச்சியல்ல, அவரது இதயத்தில் எப்போதும் இருந்த பாரம்.
சிந்திக்க வைக்கும் கேள்விகள்:
அழிகிற ஆத்துமாக்களைக் காணும்போது எனக்குள் துக்கம் உண்டாகிறதா?
என் ஜெபத்தில் மற்றவர்களின் இரட்சிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேன்?
ஆத்தும பாரம் என்பது வெறும் கண்ணீர் மட்டுமல்ல; மற்றவர்கள் அழியக்கூடாது என்ற தியாக மனப்பான்மை. நம்மைப் பிடிக்காதவர்கள் கூட பரலோகம் செல்ல வேண்டும் என்று விரும்புவதே உண்மையான சீஷத்துவம். தன் இரட்சிப்பை விட மற்றவர்களின் இரட்சிப்பு முக்கியம் என்று கருதிய பவுலின் தியாக அன்பே சிறந்த நற்செய்திப் பணி. இறையாசி
உங்களோடிருப்பதாக...
Lessons from Paul's Life Journey
Acknowledgement
Meyego

0 Comments