உம்மன் சாண்டி (Oommen Chandy, மலையாளம்: ഉമ്മന് ചാണ്ടി, 31 அக்டோபர் 1943 – 18 சூலை 2023) இந்திய அரசியல்வாதியும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.
சொந்த ஊரான புதுப்பள்ளியில், பொதுமக்கள் குஞ்குஞ்சு என்று தான் அழைக்கிறார்கள். மனைவியும் இப்படித்தான் அழைக்கிறார். இதற்கு குழந்தை என்று அர்த்தம். இவரது பெற்றோரிட்ட பெயர் சண்ணி; இவரே சிறு வயதில் குஞ்குஞ்சு என செல்லப்பெயராக மாற்றிக்கொண்டார்.
கேரளம் சட்ட சபையில்..
கேரள முதலமைச்சராக இரண்டு முறை (2004–2006, 2011–2016) பதவி வகித்தார். கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 53 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக மிக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவர் ஒருவரே ஆவார். 1970 முதல் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 12 முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தோல்வியே சந்திக்காத சாதனை படைத்தார்.
உம்மன் சாண்டி (Oommen Chandy), கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளி செயின்ட் ஜார்ஜ் ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்திற்கு (St. George Orthodox Church, Puthuppally) செல்வார். அவர் முதலமைச்சராக இருந்த காலத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் புனித ஆராதனைகளில் தவறாமல் இந்த தேவாலயத்திற்குச் சென்று கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1943 அக்.31: கேரளாவின் கோட்டயத்தில் உள்ள புதுப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். பி.ஏ., சட்டப்படிப்பு முடித்தவர்.
1969: இளைஞர் காங்., தலைவரானார். 1970: புதுப்பள்ளி தொகுதியில் முதன்முறையாக எம்.எல்.ஏ.,யாக தேர்வு. தொடர்ந்து 12 முறை இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
1977 - 78: தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
1981 - 82: உள்துறை அமைச்சர்
1991 - 94: நிதித்துறை அமைச்சர்
2004 - 2006: முதன்முறை கேரள முதல்வர்
2000 - 2011: எதிர்க்கட்சி தலைவர்
2011 - 2016: இரண்டாவது முறை கேரள முதல்வர்
2022 ஆக.2: இந்தியாவின் நீண்டகால எம்.எல்.ஏ., (18,728 நாள்) சாதனை
2023 ஜூலை 18: கேன்சர் பாதிப்பால் காலமானார்

0 Comments