இவ்வளவு பிசியான அமைச்சரா?
உம்மன்சாண்டி அமைச்சராக இருந்த போது, 1977 மே 30ல் திருமணம் நடந்தது. மாலை வரை அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தி விட்டு, இரவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். எப்போதும் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து, காலையில் கிளம்பி விடும் வழக்கம் உடையவர். முதல்வரான உடன் அரசு இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.
அங்குள்ள சமையல்காரரை மாற்றி விட்டு, தங்கள் வசதிக்கு ஒருவரை நியமிக்க, கணவருடன் கேட்க பல நாட்கள் முயற்சித்தார் மனைவி. நள்ளிரவு வீட்டிற்கு வந்து, அதிகாலையில் கட்சியினர், அதிகாரிகள் சூழ வெளியே செல்லும் சாண்டியிடம் இதைக்கூறவே முடியவில்லை. ஒரு மாதம் வரை பொறுத்து பார்த்தார் மனைவி. பின்னர், முதல்வரிடம் மக்கள் அளிக்கும் மனுவோடு தன் கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்தார்.
அதில் 'மதிப்பிற்குரிய மாநில முதல்வருக்கு... என் கணவர் மாநில முதல்வர்; எங்களது அரசு வீட்டின் சமையல்காரரை மாற்றித்தர வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தார். மனுக்களோடு மனுவாக வந்த, இந்த மனுவை பார்த்து நடவடிக்கை எடுத்தார் உம்மன்சாண்டி. முழு வரலாறு வாசிக்க இங்கே கிளிக் செய்ய வேண்டும்.

0 Comments