Ad Code

Pentecostal Sunday Reflection 2026 • பெந்தேகோஸ்தே ஞாயிறு சிந்தனை • Acts 2.4

நமது திருவசன புத்தகத்தில், பெந்தேகொஸ்தே ஞாயிறுக்கு, ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பு Pentecost: Hearing God's Voice in a Noisy World. தமிழில் இதற்கேற்ற தலைப்பு கொடுக்கப்படவில்லை. இதற்கான தமிழ் மொழிபெயர்ப்புகள்: 
A. பெந்தேகொஸ்தே: இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனின் குரலைக் கேட்டல்
B. பெந்தேகொஸ்தே: ஆரவார உலகில் ஆண்டவரின் குரல்
C. பெந்தேகொஸ்தே: இரைச்சல்களுக்கு மத்தியில் இறைவனின் குரல்

தென்னிந்திய திருச்சபையால் கொடுக்கபட்ட இந்த தலைப்பு அருமையாகவும், இந்தக் காலத்திற்கு பொருந்தக்கூடியதாகவும் உள்ளது. இதற்குக் கொடுக்கப்பட்ட ஆதார வசனம்: அப்போஸ்தலர் 2.4

பின்னணி:
இயேசு கொடுத்த வாக்குறுதியின் படியே, சீடர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சம்பவம்..

அப்படி என்ன நடந்தது? 
1. பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல ஒரு முழக்கம் கேட்டது
2. அக்கினிமயமான நாவுகள் போல் பிரிந்திருக்கும் நாவு அமர்ந்தது. 
3. வெவ்வேறு மொழிகளில் பேசினார்கள்.
4. இந்த சத்தத்தைக் கேட்டு, திரளான மக்கள் கூடிவந்தனர். (இவர்கள் சிதறடிக்கப்பட்ட யூதர்கள்)
5. தங்கள் மொழி என்பதால், கலக்கமடைந்தனர். 

இப்போது எழும் கேள்வி:- என்ன பேசினார்கள்? பேசிய மொழிகள் என்ன? 

செயல்: வெவ்வேறு மொழிகளில் (Strange) மேல் வீட்டில் இருந்தவர்கள் "பேசினார்கள்" (அப் 2.4). நம்முடைய 
கேட்டல்: நம்முடைய மொழிகள் (Own Tongues) பேசுகிறார்கள். இந்த நாடுகள் பட்டியல் உள்ளது (அப் 2.8-11). 
விளைவு: இறை மகத்துவங்களைப் (Great Things of God) பேச கேட்கிறோமே (அப் 2.11). இங்கு வரும் megaleia என்ற கிரேக்க வாரத்தை இந்த ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது.

என்ன நடைபெறவில்லை?
1. ஆவியானவர் செயல்பட, முன்னின்று ஒருவர் கட்டளையிடவில்லை.
2. ஆவியானவர் செயல்பட, தெரியாத அந்நிய மொழிகள் பயன்படுத்தப்படவில்லை.
3. ஆவியானவர் செயல்பட எந்த இசைக்கருவியும் தேவையில்லை. (இசைக்கருவி சரியான நோக்கில், சரியாகப் பயன்படுத்தினால் தவறில்லை).

இன்றைய ஆராதனைகள் ஆவியானவர் என்ற பெயரில் எடுத்துள்ள பரிமாணம் என்ன?
1. அர்த்தமற்ற கோஷங்கள்
2. ஆடுகள ஆர்ப்பாட்டம்
3. இரைச்சலான இசை

இன்றைய உலகில் இரைச்சல் உண்டாக்கும் சூழல்கள் என்ன?
1. நவீன ஊடகங்கள் Social Medias (இதில் தான் அதிகம் கேட்கிறோம் இன்று)
2. செயற்கை குரல்கள் AI Voices (எளிதில் நாம் கேட்கும் குரல்கள் AI Jesus கூட வந்துவிட்டது)
3. பணவர்க்கத்தின் குரல்கள்
(சாமானியர் குரல் ஒடுக்கப்பட்டு, பணம் வைத்திருப்போர் கருத்து தான் மேலோங்குகிறது)

இந்தச் சூழலில், இறைவனின் குரலை நாம் எப்படிக் கேட்கிறோம்?

1. உணர்ச்சிவசப்படுகிறோமா? Vs உணர்ந்துகொள்கிறோமா?
2. மனம் குளிர்கிறதா? Vs கொழுந்துவிட்டு எரிகிறதா?
3. தன்போக்கில் செல்கிறோமா? Vs சீரமைக்கப்படுகிறோமா? 

ஆவியானவர் ஆள்கொள்ளும் போது, நாம் கேட்கும் குரலினால், என்ன நடக்கும்? (TIG)
1. TRANSFORM - உருமாற்றம் நிகழும் 
யோவான் 21 கும் அப்போஸ்தலர் 2 கும் சீடர்கள் நிலை -
2. IMPACT - உருமாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தும்  
சீடர்களில் ஏற்பட்ட மாற்றம் அங்கிருந்த கூட்டத்தில் தாகத்தை ஏற்படுத்தியது.
3. GROWTH - தாக்கம் வளர்ச்சியை உண்டாக்கும் 
அநேக மக்கள் கிறிஸ்துவை பின்பற்ற ஆரம்பித்ததால், சபை வளர்ந்தது.

"உலகில் எவ்வளவுதான் இரைச்சல்களும், நம் கவனத்தைத் திசைதிருப்பும் காரியங்களும் இருந்தாலும், தூய ஆவியானவரின் துணையோடு நாம் இறைவனின் குரலைத் தெளிவாகக் கேட்க முடியும்; கேட்க வேண்டும்."

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளவும்.

மேயேகோ
9486810915

Post a Comment

0 Comments