Ad Code

Study Bibles • விளக்கவுரை வேதாகங்கள் எப்படி வாங்க வேண்டும்?

Study Bibles எனும் மாயை

சமீப காலமாக Mother's Study Bible, Youth's Study Bible, Children Study Bible, என புதுசு புதுசா Study Bible வருகின்றன. இதுபோலவே மொழிபெயர்ப்புகளும் கொஞ்சம் வார்த்தைகளை மாற்றி அதற்கு ஒரு பெயர்வைத்து அதை ஒரு Version ஆக மாறிவிடுகிறது.

Study Bibles என்றால் அதற்கென ஒரு தரம் உள்ளது. சும்மா நாலு பக்கங்களுக்கு ஒரு அரை பக்கம் வீதம் அல்லது ஒரு குட்டி Box போட்டு இது ஒரு Study Bible என ஏமாற்றும் போக்கு சமீபகாலமாக வந்துள்ளது.

உதா. Mother's Study Bible என அட்டைப்படம் போட்டு நாலுபக்கங்களுக்கு அரை பக்கம் வீதம் "ஏதோ ஒரு துணுக்கு செய்தி" போல் பதிவிட்டு Mother's Study Bible என்ற பெயரில் நடப்பது எல்லாமே பக்கா வணிகம் தான்.

இது போக பிரபல வேதாகம விளக்கவுரையாளர்களின் பெயரிலும் அவர்கள் எழுதிய விளக்கவுரையிலிருந்து சிறிது பயன்டுத்தி "அதையும் ஒரு Study Bible" என்ற பெயரில் பெரும் வணிகம் தொடங்கப்ட்டுள்ளது.

சும்மா ஏதோ ஒரு பெயரில் வரும் Study. Bibles வாங்கி பணத்தை விரயம் செய்யாதீர்.

நான் பரிந்துரைக்கும் Study Bibles :

1. NIV STUDY BIBLE
2. NKJV FULL COLOR EDITION STUDY BIBLE
3. THE COMPANION BIBLE
4. JEWISH STUDY BIBLE
5. World View STUDY BIBLE
6. CULTURAL STUDY BIBLE 
7. Full Life study Bible
8. Lutheran Study Bible 
9. Dake's Study Bible 
இன்னும் சில Study Bibles மட்டுமே.

அன்புடன்,
போதகர் செ. டேவிஸ். 

Post a Comment

0 Comments