திருநெல்வேலி திருமண்டலம் விடுமுறை வேதாகம பள்ளி (VBS)
கருத்து: ஜெயிப்பவன்
கருத்து வசனம்
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
1 யோவான் 5:5
நாள் 1: புது வாழ்வு பெற்றவன்
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.
II கொரி. 5:17
நாள் 2: சோதனையை மேற்கொள்பவன்
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
யாக்கோபு 4:7
நாள் 3: ஜாக்கிரதையுள்ளவன்
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
I பேதுரு 5:8
நாள் 4: தாழ்மையுள்ளவன்
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
யாக்கோபு 4:10
நாள் 5: பொறுமையுள்ளவன்
கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாகவும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக் கடவர்கள்.
யாக்கோபு 1:19 (பி)
நாள் 6: விசுவாசிக்கிறவன்
நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
I யோவான் 5:4 (பி)
நாள் 7: ஒற்றுமையாய் இருப்பவன்
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம் 133:1
நாள் 8: பகைவரை சிநேகிப்பவன்
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;
மத்தேயு 5:44
நாள் 9: நன்மை செய்பவன்
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
நீதிமொழிகள் 3:27
நாள் 10: கிரீடம் பெறுபவன்
நீ மரண பரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
வெளிப்படுத்தல் 2:10 (பி)
Acknowledgement
VBS Tirunelveli

0 Comments