யாக்கோபு: எழுதப்படாத வரலாறு
1. பெயர்: சின்ன யாக்கோபு (சீடர்) James the Less
2. அர்த்தம்:
'பின்பற்றுபவர்', 'கடவுள் காப்பார்' அல்லது 'குதிங்காலைப் பிடிப்பவர்' (
3. சிறுகுறிப்பு:
• இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான சின்ன யாக்கோபு, அல்பேயுவின் குமாரன் ஆவார் (சீடர் மத்தேயு இவருடைய சகோதரராக இருக்கலாம்).
• பெரிய யாக்கோபிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே இவர் "சின்ன யாக்கோபு" என அழைக்கப்பட்டார்.
• வேதாகமத்தில் இவரைப் பற்றிய பெரிய பதிவுகள் இல்லை என்றாலும்,
• இவர் யூதேயா, சமாரியா, எகிப்து போன்ற பகுதிகளில் அமைதியாக நற்செய்திப் பணி செய்தார்.
• இறுதியில், எகிப்தின் ஒஸ்ட்ராகினே (Ostrakine) என்ற இடத்தில் நற்செய்தி அறிவித்தபோது, மக்களால் கல்லெறியப்பட்டு, மரக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டு விசுவாசத்திற்காக இரத்தசாட்சியாக மரித்தார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
நமக்கு மிகக் குறைவாகத் தெரிந்த ஓர் அப்போஸ்தலர் என்றால் அவர் இவர் தான். பெரும்பாலான அப்போஸ்தலர்களின் பல்வேறு செயல்களை வேதாகமம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த மனிதருடைய பெயர் மட்டும்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடைய எந்த ஒரு செயலோ, கிரியையோ, பிரசங்கமோ அல்லது பெரிய அளவிலான நற்செய்திப் பணிகளோ வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. நமது ஊழியமும் நற்செயல்களும் மனிதர்களின் கண்களுக்கு வெளிப்படாமலோ, அங்கீகாரம் பெறாமலோ போகலாம்; ஆனால், பின்னணியில் இருந்தாலும் நம் அழைப்பில் உண்மையாய் இருக்கும்போது பரலோகத்தில் நம் கடவுள் நம்மை உற்றுநோக்குகிறார்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு 10:3 (சீடர்களின் பட்டியல்)
மாற்கு 15:40 (சிலுவையின் அருகில் நின்ற ஸ்திரீகள் பற்றிய குறிப்பு)
அப்போஸ்தலர் 1:13 (மேல்வீட்டு அறையில் ஜெபத்தில் தரித்திருந்த சீடர்கள்)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments