யோவான்: சிலுவையடியில் நிற்பதும் மார்பில் சாய்வதே
1. பெயர்: யோவான் John
2. அர்த்தம்: யெகோவா கிருபையுள்ளவர் The Lord is gracious
3. சிறுகுறிப்பு:
• இவர் செபதேயு மற்றும் சலோமி ஆகியோரின் மகன்
• திருத்தூதர் யாக்கோபுவின் சகோதரர்
• மீன்பிடித் தொழிலைச் செய்துவந்த இவரை இயேசு தம் சீடராக அழைத்தார். • இவரின் தீவிரமான சுபாவத்திற்காக
• இவரும் இவர் சகோதரரும் "இடியின் மக்கள்" (Boanerges) இயேசுவால் அழைக்கப்பட்டனர்.
• யோவான் நற்செய்தி நூல், மூன்று நிருபங்கள், வெளிப்படுத்தின விசேஷம் இவரால் எழுதப்பட்டுள்ளது.
• சுவிசேஷப் பணிக்காக உரோமை பேரரசால் பத்மு தீவுக்கு (Island of Patmos) நாடுகடத்தப்பட்டார்.
• இரத்தச்சாட்சியாக (கொலை செய்யப்பட்டு) மரிக்காமல், இயற்கை மரணமடைந்த ஒரே அப்போஸ்தலர்
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசுவின் மார்பில் சாயுமளவுக்கு அவரோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்த இவர் இயேசுவை விட்டு எல்லா சீடரும் ஓடிய பின்பும், சிலுவை அடியில் நின்றார். இயேசு தன் சொந்த சகோதரர்களைவிட யோவானை நம்பி தன் தாய் மரியாளைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இவரைப் போல் இறைவனுடைய அன்பிலும் நிலைத்திருக்க வேண்டும்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மாற்கு 1:19-20 (இயேசு இவரை அழைத்தல்)
யோவான் 13:23 (இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த சீடர்)
யோவான் 19:25-27 (சிலுவையின் அடியில் மரியாளைப் பொறுப்பேற்றல்)
1 யோவான் 4:7-12 (அன்பைப் பற்றிய யோவானின் போதனை)
வெளிப்படுத்துதல் 1:9-11 (பத்மு தீவில் தரிசனம் பெறுதல்)
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments