Ad Code

கிலேயோப்பா • Cleopas Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 31
கிலேயோப்பா: உபசரிப்பின் மேன்மை 

1. பெயர்: கிலேயோப்பா • Cleopas 
2. அர்த்தம்: 
"முழு கீர்த்தி பெற்றவன்" அல்லது "பிதாவின் மகிமை" (Glory of the father / Renowned).

3. சிறுகுறிப்பு: 
• கிலேயோப்பா புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் தோன்றும் ஒரு முக்கிய சீஷராவார்.
• கிலேயோப்பாவும் அவரோடு இன்னொரு சீஷரும் எருசலேமிலிருந்து ஏறக்குறைய ஏழு மைல் (60 Stadia) தூரத்திலுள்ள எம்மாவு என்னும் கிராமத்திற்கு மிகவும் துக்கத்தோடு நடந்து போய்க்கொண்டிருந்தனர்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
எம்மாவு சீஷர்கள் தங்களுக்கு முன்பின் தெரியாத ஒரு அந்நியராகவே இயேசுவை வழியில் பார்த்தார்கள். பொழுது சாய்ந்துவிட்டபடியால், "எங்களோடு தங்கும்" என்று அன்போடு அவரைத் தங்கள் வீட்டிற்குள் வரவேற்று உபசரித்தார்கள். அவர்கள் காட்டிய அந்த உபசரிப்புதான், உயிர்த்தெழுந்த கர்த்தரை அவர்கள் நேரில் தரிசிக்கும் மாபெரும் பாக்கியத்தைத் தந்தது. 

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 24: 13-35 எம்மாவு சீஷர்கள் பயணம்
யோவான் 19:25 கிலேயோப்பாவின் மனைவியான மரியாளைப் பற்றிய குறிப்பு

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments