இறைமைந்தர் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரால் அன்பின் வாழ்த்துகள்.
இந்த ஜூலை மாதத்திற்கான கருத்து ஆண்டவர் விரும்பும் மிஷ்பாத்
Mishpat that the Lord Desires
இதற்கான ஆதார வசனம்
சங்கீதம் 37:28
யெகோவா நியாயத்தில் (Mishpat ) பிரியப்படுகிறார்;
தமக்கு உண்மையாய் இருப்பவர்களைக் கைவிடவும்மாட்டார்.
அவர்கள் என்றென்றும் பாதுகாக்கப்படுவார்கள்.
சங்கீதம் 37, அரசர் தாவீதின் முதிர்ந்த வயதில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து எழுதப்பட்ட ஒரு ஞானப் பாடலாகும். தீயவர்கள் உலகத்தில் செழித்து வளர்வதைக் கண்டு இறை நம்பிக்கையுள்ள நீதிமான்கள் சோர்வடையக் கூடாது விளக்கும் திருப்பாடலாகும்.
சங்கீதம் 37.28 சொல்லுகிறது: கடவுள் எப்போதும் நீதியின் பக்கமே நிற்கிறார். உலகில் அநியாயங்கள் நடப்பது போலத் தோன்றினாலும், அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
1. பிரியப்படுகிறார்
நியாயம் யார் பக்கமே அவர்கள் மேல் கடவுள் விருப்பம் உள்ளவராக இருக்கிறார்.
2. கைவிடமாட்டார்
சோதனையான காலங்களிலும் கடவுள் தங்களை நம்புவோரை ஒருபோதும் கைவிடமாட்டார்.
3. பாதுகாக்கிறார்
நீதிமான்களுக்கான பாதுகாப்பு தற்காலிகமானது அல்ல, அது நிரந்தரமானது.
ஆம், இறை மக்களே, உங்கள் விசுவாசப் போராட்டத்தில் சோர்ந்து போக வேண்டாம். அவருக்காக உறுதியாக நில்லுங்கள். நீதியின் கடவுள் உங்கள் பக்கம்.
அன்புடன் வாழ்த்தும்
மேயேகோ+
01.07.2026

0 Comments