1930 களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பெரிய உற்பத்தி நிறுவனம் ஏராளமான இயந்திரங்களைத் தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஜப்பான் நாட்டிற்கு தேவைப்பட்ட ஒரு இயந்திரத்தை அந்த நிறுவனம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது.
முதலில் அந்த இயந்திரம், நன்றாக வேலை செய்தது. சில நாட்கள் சென்றதும் அந்த இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்றும், அதைச் சரி செய்து கொடுப்பதற்கு உடனடியாக ஒருவரை ஜப்பானுக்கு அனுப்பி வைக்கும்படி அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தது ஜப்பான். அந்த அமெரிக்க நிறுவனமும் உடனே ஒருவரை அனுப்பி வைத்தது.
அந்த நபரைப் பார்த்ததும் ஜப்பான் மற்றொரு அவசரச் செய்தியை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பியது. அந்த செய்தியில் நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் நபர் இளைஞராக இருக்கிறார், அதனால் தயவு கூர்ந்து கொஞ்சம் வயதான, அனுபவமிக்கவரை அனுப்பி வைத்தால் நலமாக இருக்கும் என்று இருந்தது.
அதற்கு அந்த அமெரிக்க நிறுவனம் நாங்கள் அனுப்பியுள்ள இளைஞரையே பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஏனென்றால் அந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்தவரே அவர் தான் என்று பதில் அனுப்பியது.
✒️✒️✒️
ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து நாம் அவர்களை எடை போடக்கூடாது. பல நேரங்களில் அது தவறாக இருக்கக்கூடும். நம்மில் அநேகர் அறிவையும், ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகிறோம். ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவர்களின் திறமையை நாம் அறிய முடியாது. அவர்களின் கிரியையை வைத்துத் தான் அவர்களின் குணத்தை நாம் அறிய முடியும். எனவே யாரையும் பார்த்த உடன் தவறான முடிவு எடுக்க வேண்டாமே.

0 Comments