திருமறையில் யார் இவர் யாரோ? - 50
இயேசு: வாழ்ந்துகாட்டிய மாதிரி
1. பெயர்: இயேசு • Jesus
2. அர்த்தம்:
இரட்சகர் / கர்த்தர் இரட்சிக்கிறார் (Yahweh saves)
3. சிறுகுறிப்பு:
• உலகத்தின் பாவங்களுக்காக மனித உருவில் பூமிக்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தேவ குமாரன்.
• உலக பெற்றோர்: யோசேப்பு & மரியாள்
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசு வெறும் போதனைகளுடன் நின்றுவிடாமல், தாம் சொன்னபடியே தமது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அவற்றைச் செய்து ஒரு பரிபூரண முன்மாதிரியாக விளங்கினார். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் மனிதனாகவே பிறந்து, தன் சொந்த வாழ்க்கையில் நடித்துக் காட்டாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உண்மையான மாதிரியே இயேசு கிறிஸ்து. அவர் நமக்குக் காண்பித்த முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பதே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாகும்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
மத்தேயு, மாற்கு, லூக்கா & யோவான்
1 பேதுரு 2:21-25
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Who is Jesus? Is Jesus God?

0 Comments