Ad Code

பிலிப்பு • Philip the Tetrarch • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 37
பிலிப்பு: தேவையற்றதில் தலையிட வேண்டாம்

1. பெயர்: பிலிப்பு • Philip the Tetrarch (காற்பங்கு அதிபதியாகிய பிலிப்பு)

2. அர்த்தம்: 
குதிரைகளை நேசிப்பவன்

3. சிறுகுறிப்பு: 
• இவர் மகா ஏரோது ராஜாவிற்கும், அவனுடைய மனைவியாகிய கிளியோபாத்ராவிற்கும் (Cleopatra of Jerusalem) பிறந்த மகன் ஆவார்
• மகா ஏரோதின் மரணத்திற்குப் பிறகு, இத்துரேயா, திராகோனித்தி நாடுகள் அடங்கிய பகுதிக்குக் காற்பங்கு அதிபதியாக (Tetrarch) கி.பி. 4 முதல் கி.பி. 34 வரை ஆட்சி செய்தார்.
• ஏரோது குடும்பத்தைச் சேர்ந்த மற்ற ஆட்சியாளர்களைப் போலன்றி, இவர் அமைதியான, நீதியான மற்றும் மிதமான ஒரு ஆட்சியைத் தந்ததாக வரலாற்று ஆசிரியர் ஜோசிபஸ் குறிப்பிடுகிறார்.
• இவர் பிலிப்பு இராயசரியா (Caesarea Philippi) நகரத்தைக் கட்டி, அதற்குத் தன் பெயரையும், ரோம சக்கரவர்த்தி (இராயன்) பெயரையும் சூட்டினார்.

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ஏரோது வம்சத்தைச் சேர்ந்த மற்ற அரசர்கள் (உதாரணமாக ஏரோது அந்திபாஸ்) தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டவும், ஆடம்பரத்தை வெளிப்படுத்தவும், பிறருடைய சொத்துக்களைப் பறிக்கவும் அநீதியான வழிகளைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பிலிப்பு தனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய எல்லையை (காற்பங்கு நிலத்தை) அமைதியாக ஆட்சி செய்வதிலேயே திருப்தியடைந்தார்; தேவையற்ற அதிகாரப் போட்டிகளில் இறங்கவில்லை.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
லூக்கா 3:1

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments