Ad Code

செபதேயு • Zebedee • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 40
செபதேயு: பிள்ளைகளை இறைப்பணிக்காக அனுப்பி வைத்தவர்

1. பெயர்: செபதேயு • Zebedee

2. அர்த்தம்: 
யெகோவா தந்த கொடை

3. சிறுகுறிப்பு: 
• இவர் கலிலேயா கடலில் தொழில் செய்த ஒரு வசதியான மீனவர்.
• இவருக்கு சொந்தமாக படகுகளும், வேலைக்காரர்களும் இருந்தனர் (மாற்கு 1:20).
• இவருடைய மனைவி சலோமி (இயேசுவுக்கு சிலுவை வரை பணிவிடை செய்தவர்).
• இவருடைய குமாரர்கள் இயேசுவின் முதன்மை சீடர்களான யாக்கோபு மற்றும் யோவான் ஆவர்.


4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இயேசு இவருடைய மகன்களை அழைத்தபோது, அவர்கள் தங்கள் தகப்பனையும் படகையும் விட்டுவிட்டு உடனடியாக இயேசுவைப் பின்பற்றிச் சென்றனர். அதற்கு செபதேயு தடையாக இருக்கவில்லை. தனது தொழில் மற்றும் குடும்பத் தேவைகளைத் தாண்டி, தன் பிள்ளைகள் இறைப்பணிக்காக, அழைக்கப்பட்டபோது, செபதேயு அவர்களைத் தடுக்காமல் மகிழ்ச்சியோடு அனுப்பி வைத்தார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 4:21-22
மாற்கு 1:19-20

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments