திருமறையில் யார் இவர் யாரோ? - 88
ஆக்கில்லா: ஊழியருக்காக கழுத்தைக் கொடுக்க முன்வந்தவர்
1. பெயர்:
ஆக்கில்லா Aquila
2. அர்த்தம்:
கழுகு Eagle
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 18:2-3:
கொரிந்துவில் பவுலோடு இணைந்து கூடாரம் பண்ணும் தொழில் செய்து நற்செய்தி அறிவித்தனர்.
அப்போஸ்தலர் 18:18-19, 26 எபேசுவுக்குச் சென்று, அஃப்பொல்லோவுக்குத் இறைவனுடைய வழியைத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தனர்
ரோம 16:3-4, 1 கொரி 16:19, 2 தீமோ 4:19: வீட்டுச்சபையும் தியாகமும்: தங்கள் வீட்டையே சபையாக மாற்றியதுடன், பவுலின் உயிரைக் காக்கத் தங்களையே ஆபத்துக்குட்படுத்தி இறுதிவரை உண்மையாய் ஊழியத்திற்குத் துணைநின்றனர்
4. வரலாற்றுக் குறிப்புகள்
• பிறப்பிடம்: கருங்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள 'பொந்து' (Pontus) தேசத்தைச் சேர்ந்த யூதர்.
• இத்தாலியிலிருந்து வெளியேற்றம்: கி.பி. 49-50 வாக்கில் கிளோதியு ராயன் (Emperor Claudius) யூதர்கள் அனைவரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கட்டளையிட்டதால், மனைவியுடன் இத்தாலியிலிருந்து அகதியாகக் கொரிந்துவுக்கு வந்தவர்.
• தொழிலும் ஊழியமும்: கூடாரம் பண்ணுகிற தொழில் செய்தவர். பவுலையும் அதே தொழிலில் பங்கேற்கச் செய்து, அவருடன் நெருங்கிய நற்செய்தி கூட்டாளியாக மாறினார். கொரிந்து, எபேசு, ரோமாபுரி ஆகிய இடங்களில் தங்கள் வீட்டைச் சபையாகப் பயன்படுத்தி ஊழியத்திற்குத் திறந்துகொடுத்தனர்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தேவ ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்காகவும், தேவ ஊழியரின் (பவுலின்) உயிரைக் காப்பாற்றவும் தங்கள் சொந்த பிராணனையே (கழுத்தை) பணைய வைக்கத் தயங்காத அர்ப்பணிப்பு இவரிடம் இருந்தது. அனுகூலமான சூழலில் மட்டுமல்லாமல், துன்பமும் ஆபத்தும் சூழ்ந்த நெருக்கடியான காலகட்டங்களிலும் ஊழியர்களோடு தோளோடு தோள் நின்று அவர்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணம் இருந்தது.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments