Ad Code

பிலாத்து / பிளாஸ்டஸ் Blastus Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 65
பிலாத்து: செல்வாக்கு நிலையில்லை 

1. பெயர்:  
பிலாத்து / பிளாஸ்டஸ் Blastus

2. அர்த்தம்: 
முளைத்தல்

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 12:20 — பிளாஸ்டஸ் ஏரோது ராஜாவின் அந்தப்புரத்து விசாரணைக்காரனாக (chamberlain) இருந்தார். தீரு, சீதோன் மக்கள் மன்னனுடன் சமாதானமாக இவருடைய தயவை நாடினர்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• அரச குடும்பத்து உறுப்பினர்களுடனும், மன்னனின் தனிப்பட்ட விவகாரங்களிலும் நெருங்கிய செல்வாக்கும் நம்பிக்கையும் பெற்ற அதிகாரியாக இவர் விளங்கினார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தீரு மற்றும் சீதோன் நகர மக்கள் ஏரோது மன்னனின் கோபத்திற்கு ஆளானபோது, தங்களுக்கான உணவு தானிய விநியோகம் தடைபடக்கூடாது என்பதற்காக பிளாஸ்டஸை அணுகி, அவனது செல்வாக்கைப் பயன்படுத்தி மன்னனோடு சமாதானமாக முயன்றனர். அரசாங்க உயர் பதவியும், மனிதர்களின் செல்வாக்கும் என்றும் நிலையானவை அல்ல. இறுதியில், தோல்வியில் முடிந்தது.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments