Ad Code

கிளாடியஸ் சீசர் (Claudius Caesar) Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 63
கிலாவுதியு ராயன்: நன்மையாக முடியும்

1. பெயர்: கிளாடியஸ் சீசர் (Claudius Caesar)

2. அர்த்தம்: 
முடவன் Lame 

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
• அப்போஸ்தலர் 11:28 – கிலாவுதியு ராயனின் ஆட்சிக் காலத்தில் உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று அகபு தீர்க்கதரிசி அறிவித்தார்; அது அப்படியே சம்பவித்தது.
• அப்போஸ்தலர் 18:2 – கிலாவுதியு ராயன் யூதர் எல்லாரையும் ரோமாபுரியை விட்டு வெளியேறக் கட்டளையிட்டதால், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் இத்தாலியிலிருந்து வெளியேறி கொரிந்துவுக்கு வந்தனர்.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• ரோமப் பேரரசின் 4-வது பேரரசர் (கி.பி. 41 முதல் கி.பி. 54 வரை ஆட்சி செய்தவர்).
• உடற்குறைபாடு மற்றும் தடுமாறிப் பேசும் இயல்பு கொண்டவராக இருந்தபோதிலும், திறம்பட ஆட்சி செய்து ரோமப் பேரரசை விரிவுபடுத்தினார் (குறிப்பாக பிரித்தானியாவைக் கைப்பற்றினார்).
• இவரது ஆட்சிக் காலத்தில் ரோமப் பேரரசு முழுவதும் தீவிரமான உணவுப் பஞ்சங்கள் ஏற்பட்டதாகப் வரலாற்று ஆசிரியர் சூடோனியஸ் (Suetonius) மற்றும் ஜொசிஃபஸ் (Josephus) குறிப்பிட்டுள்ளனர்; இது விவிலியத்தில் அகபு தீர்க்கதரிசி முன்னறிவித்த பஞ்சத்தோடு ஒத்துப்போகிறது.
• கி.பி. 49-50 வாக்கில யூதர்களிடையே ஏற்பட்ட மதக் கலவரங்கள் காரணமாக, ரோமாபுரியில் இருந்த அனைத்து யூதர்களையும் அந்நகரை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டார்.
• இதனால் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாவும் கொரிந்து பட்டணத்திற்கு வந்து, அப்போஸ்தலனாகிய பவுலோடு இணைந்து ஊழியஞ்சய்ய நேரிட்டது.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
கிலாவுதியு ராயன் யூதர்களை ரோமிலிருந்து துரத்தியது ஒரு துன்புறுத்தலாகத் தோன்றினாலும், அதன் மூலம் ஆக்கில்லா - பிரிஸ்கில்லா ஜோடி பவுலைச் சந்திக்க நேர்ந்தது. இது தொடக்க காலக் திருச்சபையின் சுவிசேஷ வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக மாறியது. மனிதர்களின் திட்டங்கள் பேரரசுகளின் மூலமாகச் செயல்பட்டாலும், இறைத் திட்டம் அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் மேலாக நிறைவேறும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments