தமிழ்நாட்டில் மொத்த கிறிஸ்தவ மக்கள் தொகையில் தலித் கிறிஸ்தவர்கள் கிட்டத்தட்ட 65% பங்கைக் கொண்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டின் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள மக்கள் தொகையில் தலித் கிறிஸ்தவர்கள் 70% ஆக உள்ளனர்.
திருச்சபைகளுக்குள் சாதிப் பாகுபாடு
சமூகப் புறக்கணிப்பு (பிரித்து வைத்தல்)
ஒரே மதக் குழுவிற்குள் பல தலித் கிறிஸ்தவர்கள் ஆதிக்க சாதியினரிடமிருந்து சாதிய பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர்.
சமத்துவமற்ற உரிமை
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் தனித் தனி இருக்கை வசதிகள், தனிச் மயானங்கள் (கல்லறைத் தோட்டங்கள்) மற்றும் திருச்சபை விழாக்கள் அல்லது திருச்சபை நிர்வாகத்தை நிர்வகிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிக்கைகள் காட்டுகின்றன.
பதவிகள்
தமிழக திருச்சபைகளில் கணிசமான மக்கள் தொகை தலித் கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும், பேராயர்கள், ஆயர்கள், மற்றும் உயர் நிர்வாகப் பொறுப்புகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது.
பொருளாதாரப் பின்தங்கிய நிலை
தலித் கிறிஸ்தவர்களில் பெருமளவிலான மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சேரிப் பகுதிகளில் வசிக்கின்றனர்; மேலும் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
சட்ட மற்றும் அரசியல் அமைப்பு நிலை
பட்டியலின (SC) இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு
1950 ஆம் ஆண்டைய அரசியல் அமைப்பு (பட்டியலினத்தவர்) ஆணையின் பத்தி 3, பட்டியலின இடஒதுக்கீடு நன்மைகளை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமே என வரையறுக்கிறது. இதில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சேர்க்கப்படவில்லை.
உரிமைகள் இழப்பு
இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுபவர்கள், பட்டியலினத்தவருக்கான நேர்மறை நடவடிக்கை (இடஒதுக்கீடு) நன்மைகளை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் நிதி மற்றும் சமூகப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்துகிறது என்று சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
Dalit Christians in Tamil Nadu make up nearly 65% of the state's all Christian population. In Tamil Nadu Dalit Christians constitute 70% Population of the Catholic Church.
Caste Discrimination inside Churches
Social Segregation
Many Dalit Christians face caste bias from dominant castes within the same religious groups.
Unequal Access
Reports show separate seating areas, separate cemeteries, and restrictions on managing church festivals or church administration in parts of Tamil Nadu.
Positions
Despite Dalit Christians constituting a significant majority (70%) of the population in Tamil Nadu Churches, their representation among Archbishops, Bishops, and higher administrative positions remains extremely low.
Economic Disadvantage
A large percentage of Dalit Christians live in segregated slums and struggle with limited access to higher education and jobs.
Legal and Constitutional Status
Exclusion from SC Quotas
Paragraph 3 of the Constitution (Scheduled Castes) Order of 1950 limits SC reservation benefits to Hindus, Sikhs, and Buddhists, excluding Christians and Muslims.
Loss of Rights
People who convert from Hinduism to Christianity lose their Scheduled Caste affirmative action benefits, which activists argue deepens their financial and social struggles.
Complied by
Meyego

0 Comments