திருமறையில் யார் இவர் யாரோ? - 119
அரிஸ்தொபூல்: நற்செய்தியின் வலிமை
1. பெயர்:
அரிஸ்தொபூல் Aristobulus
2. அர்த்தம்:
சிறந்த ஆலோசகர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
ரோமர் 16:10
அரிஸ்தொபூலுவின் வீட்டாருக்கு வாழ்த்துச் சொல்லுங்கள்."
4. வரலாற்றுக் குறிப்புகள்
• அரிஸ்தொபூல் ரோமாபுரியில் வாழ்ந்த செல்வாக்குமிக்க ஒரு முக்கியப் பிரமுகர்.
• வரலாற்றாசிரியர்களின் (Josephus) கூற்றுப்படி, இவர் ஏரோது மகாராஜாவின் பேரன் (Aristobulus IV) ஆக இருக்கலாம் என்றும், ரோமில் வசித்து வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் கருதப்படுகிறது.
• திருச்சபை மரபுகளின்படி, இவர் ஆரம்பகால எழுபது சீடர்களில் ஒருவராகவும், பின்னர் பிரித்தானியாவுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்று அங்கு சுவிசேஷப் பணியாற்றி மரித்தார் என்றும் நம்பப்படுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
ரோமப் பேரரசின் உயர் மட்டத்திலிருந்த ஒரு பிரபுவின் வீட்டிற்குள்ளும் நற்செய்தி ஊடுருவி, அங்கிருந்தவர்களை விசுவாசிகளாக மாற்றியிருந்தது. எந்த இடமும், எந்த மனிதர் வாழும் சூழலும் தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்டது அல்ல. கடினமான அல்லது செல்வாக்குமிக்க சூழல்களிலும் சுவிசேஷம் தன் வல்லமையைக் காட்டும் என்பதற்கு இவருடைய வீட்டார் ஒரு சிறந்த உதாரணம்
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments