லீசியா: கடவுள் பயன்படுத்திய உலக அதிகாரி
1. பெயர்:
கிலாவுதியு லீசியா (Claudius Lysias - சேனாதிபதி / Roman Tribune)
2. அர்த்தம்:
விடுவிப்பவர்
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 21:31-40 – எருசலேம் தேவாலயத்தில் பவுலைக் கொல்லத் திரண்ட யூதக் கூட்டத்தினரிடமிருந்து லீசியா அவரைக் காப்பாற்றி கோட்டைக்குக் கொண்டு செல்கிறார்.
அப்போஸ்தலர் 22:23-29 – பவுலைச் சாட்டையால் அடிக்க உத்தரவிட்ட பின், பவுல் பிறப்பால் ரோமக் குடிமகன் என்பதை அறிந்து லீசியா பயந்து, அவரைத் தண்டனையிலிருந்து விலக்குகிறார்.
அப்போஸ்தலர் 23:10-35 – பவுலைக் கொலை செய்ய யூதர்கள் தீட்டிய சதியைக் கேள்விப்பட்டு, 470 படைவீரர்களுடன் பவுலை செசரியாவுக்கு அதிபதியாகிய பேலிக்ஸினிடடம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறார்.
அப்போஸ்தலர் 24:7, 22 – பேலிக்ஸ் அதிபதி மற்றும் தெர்த்துல்லு ஆகியோரால் லீசியாவின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• லீசியா, எருசலேமில் உள்ள அந்தோனியா கோட்டையில் (Fortress of Antonia) காவல் புரிந்த ரோமானிய படைப்பிரிவின் சேனாதிபதி (Chiliarch - ஆயிரம் வீரர்களுக்குத் தலைவன்) ஆவார்.
• இவர் பிறப்பால் ரோமானியர் அல்ல; பெரும்தொகை கொடுத்து ரோமக் குடியுரிமையை விலைக்கு வாங்கியவர் (அப்போஸ்தலர் 22:28).
• எருசலேமில் கலகங்கள் ஏற்படாமல் அமைதியை நிலைநாட்டுவதும், ரோமச் சட்டத்தைப் பின்பற்றுவதும் இவரது முதன்மைப் பணியாக இருந்தது.
• பவுலைச் செசரியாவுக்கு அனுப்பும்போது பேலிக்ஸ் அதிபதிக்கு இவர் எழுதிய கடிதம் (அப்போஸ்தலர் 23:26-30), ஒரு ரோமானிய அதிகாரியின் நிர்வாகத் திறமையையும் விவேகத்தையும் காட்டுகிறது.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பவுலின் உயிரைக் காப்பாற்றவும், நற்செய்தி ரோமாபுரி வரை பரவவும் கடவுள் ஒரு புறஜாதி அதிகாரியான லீசியாவைப் பயன்படுத்தினார். நாம் இறைவனுடைய திட்டத்தில் இருக்கும்போது, சுற்றியுள்ள சூழ்நிலைகளையும் அவிசுவாசிகளான அதிகாரிகளையும் கூட கடவுள் நமக்குச் சாதகமாக மாற்றித் தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments