Ad Code

தெமேத்திரியு• Demetrius • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 96
தெமேத்திரியு: சுயநலத்துக்காக பிரச்சினையை தூண்டாதே

1. பெயர்:  
தெமேத்திரியு• Demetrius

2. அர்த்தம்: 
'டெமீட்டர்' (Demeter - கிரேக்க விவசாயம் மற்றும் விளைச்சலின் தேவதை) என்பவருக்குச் சொந்தமானவன் அல்லது "தானியத் தேவதைக்குரியவன்".

3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 19:24–38 – எபேசு பட்டணத்தில் பவுலின் ஊழியத்தை எதிர்த்த வெள்ளித் தச்சனாகிய தெமேத்திரியு.

4. வரலாற்றுக் குறிப்புகள்
• தெமேத்திரியு எபேசு நகரத்தில் வாழ்ந்த ஒரு முதன்மையான வெள்ளித் தச்சன் (Silversmith).
• இவர் அத்தேமி (தியானா / Artemis) தேவியின் வெள்ளியினாலான சிறு திருக்கோவில் மாதிரிகளைச் செய்து, கைவினைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் லாபத்தைக் கொண்டுவந்து கொண்டிருந்தார்.
• பவுல் எபேசுவில் "கைகளால் செய்யப்பட்டவை தெய்வங்கள் அல்ல" என்று பிரசங்கித்ததால், தன் வியாபாரமும் அத்தேமி தேவியின் பெருமையும் பாதிக்கப்படும் என அஞ்சிய தெமேத்திரியு, சக கைவினைஞர்களை ஒன்றுதிரட்டி எபேசு நாடகசாலையில் பவுலுக்கும் கிறிஸ்தவ மார்க்கத்திற்கும் எதிராகப் பெரிய கலக்கத்தை உண்டாக்கி "எபேசியருடைய அத்தேமி தேவியே பெரியவள்" என்று சுமார் இரண்டு மணி நேரம் கூச்சலிடச் செய்தார்.

5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
தெமேத்திரியு கிளப்பிவிட்ட உணர்ச்சிவசப்பட்ட கூச்சலால் எபேசு நகரமே கலங்கியது. அந்த கூட்டத்தில் இருந்த பலருக்கு "நாங்கள் எதற்காகக் கூடியிருக்கிறோம்" என்று கூடத் தெரியாமல் கூச்சலிட்டார்கள் (அப்போஸ்தலர் 19:32). பிறர் தூண்டிவிடும் உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களுக்கும், வதந்திகளுக்கும் பின்னால் கண்மூடித்தனமாகச் செல்லாமல், எது சத்தியம் என்பதைப் பகுத்தறிந்து நிதானமாகச் செயல்பட வேண்டும்.

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

Post a Comment

0 Comments