இறைமக்கள் ஞாயிறு (Laity Sunday) உணர்த்தும் 3 முக்கிய பாடங்கள்
1. ஒவ்வொரு விசுவாசியும் ஒரு ஊழியக்காரர்:
திருச்சபையில் குருக்கள் / போதகர்கள் மட்டுமே ஊழியர்கள் அல்ல; திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு விசுவாசியும் (Lay Person) கிறிஸ்துவின் ஊழியக்காரரே ஆகும்.
2. சபையின் வளர்ச்சிக்கு இணக்கமான கூட்டிணைப்பு:
அப்போஸ்தலர் 6-ஆம் அதிகாரத்தில் விசுவாசிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டபோது, "தேவவசனம் விருத்தியடைந்தது" (அப்போஸ்தலர் 6:7). அதேபோல, இன்றும் விசுவாசிகள் சபைப் பணிகளில் தீவிரமாக ஈடுபடும்போது சபை வளர்ச்சி பெறுகிறது.
3. சமயச் சார்பற்ற பணிகளும் ஆவிக்குரிய பணிகளே:
உணவு பரிமாறுவது போன்ற அன்றாடக் காரியங்களைச் செய்வதற்குக்கூட "பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த" நபர்கள் தேவைப்பட்டார்கள். எனவே விசுவாசிகள் செய்யும் அனைத்து நற்பணிகளும் கடவுளுக்கு முன்பாக பரிசுத்தமானவை.
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ
9486810915
#CSILaitySunday #LaitySunday #இறைமக்கள்ஞாயிறு #CSICurch #TamilChristian #PriesthoodOfAllBelievers #FaithInAction

0 Comments