திருமறையில் யார் இவர் யாரோ? - 109
பெஸ்து: உலக அறிவு போதாது
1. பெயர்:
பொர்க்கியு பெஸ்து • Porcius Festus
2. அர்த்தம்:
மகிழ்ச்சியான
3. திருமறை குறிப்புகள்: (இருப்பிடத்துடன்)
அப்போஸ்தலர் 24:27 – அந்தோனியு பேலிஸ்க்குப் பின் பொர்க்கியு பெஸ்து யூதேயாவின் ரோம அதிபதியாக (ஆளுநர்) பொறுப்பேற்றல்.
அப்போஸ்தலர் 25:1-12 – யூத தலைவர்களின் சதியை முறியடித்து, பவுலின் வழக்கைக் விசாரித்தல். பவுல் தன்னுடைய வழக்குக்காக ரோமச் சக்கரவர்த்திக்கு (இராயனுக்கு) அபயமிடுதல்.
அப்போஸ்தலர் 25:13-27 – இரண்டாம் அகிரிப்பா ராஜாவிடமும் பெர்னிக்கேயாவிடமும் பவுலின் வழக்கைப் பற்றி ஆலோசனை செய்தல்.
அப்போஸ்தலர் 26:24-25 – பவுல் கிறிஸ்துவைக் குறித்து சாட்சி பகரும்போது, "பவுலே, நீ பைத்தியக்காரன், அதிகக் கல்வி உன்னைப் பைத்தியமாக்குகிறது" என்று பெஸ்து உரக்கக் கூறுதல்.
4. வரலாற்றுக் குறிப்புகள்
• ஆட்சி காலம்: கி.பி. 59–60 வாக்கில் ரோமச் சக்கரவர்த்தி நீரோவால் யூதேயாவின் ஆளுநராக (Procurator) நியமிக்கப்பட்டார்.
• வரலாற்றாசிரியர் கூற்று: யூத வரலாற்று ஆசிரியர் ஜொசிஃபஸ் (Josephus) கூற்றுப்படி, பெஸ்து தனக்கு முன் இருந்த பேலிக்ஸ் (Felix) மற்றும் பின் வந்த அல்ப்பினஸ் (Albinus) ஆகிய அதிபதிகளை விட நியாயமானவராகவும், திறமையான நிர்வாகியாகவும் இருந்தார்.
• சட்டம் ஒழுங்கு: யூதேயாவில் தீவிரமாகச் செயல்பட்ட ‘சிகாரியி’ (Sicarii) என்ற கலகக்காரர்களையும், கொள்ளைக்காரர்களையும் அடக்கி அமைதியை நிலைநாட்ட முயன்றார்.
• மறைவு: பதவியேற்ற குறுகிய காலத்திலேயே (கி.பி. 62 இல்) நோயுற்று காலமானார்.
5. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
பெஸ்து ஒரு நேர்மையான அரசியல்வாதியாக இருந்தபோதிலும், கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஆன்மீகச் சத்தியத்தைக் கேட்டபோது அதை "பைத்தியகாரம்" என்று கருதினார். உலகக் கல்வியும் அதிகாரமும் மட்டும் ஒருவருக்கு இறைவனுடைய இரட்சிப்பைப் புரிய வைக்க முடியாது; அதற்குத் தேவ ஆவியின் வெளிப்பாடு அவசியம் (1 கொரிந்தியர் 1:18).
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.
Bible Characters in Tamil

0 Comments