1. தலைப்பு
திமிர்வாதக்காரன் சுகமடைதல்: இறைமைந்தரின் மன்னிக்கும் அதிகாரம்
2. திருமறை பகுதி
மத்தேயு 9: 1 - 8
மாற்கு 2 : 1 - 12
லூக்கா 5: 17 - 26
3. இடம் & பின்னணி
இயேசு கப்பர்நகூமிலிருந்து கெர்கெசனேர் நாட்டிற்க்கு சென்று அங்கு இரண்டு பிசாசு பிடித்தவர்களை குணமாக்கிவிட்டு மீண்டும் கப்பர்நகூமிற்கு வருகிறார் (மாற். 2:1-2). கப்பர்நகூமில் இயேசு, வீட்டில் இருக்கும் போது அங்கே ஒரு திமிர்வாதாகாரனை சுமந்து கொண்டு வருகிறார்கள். அங்கே கலிலேயா யூதேயா நாட்டில் உள்ள கிராமத்தில் இருந்தும் மற்றும் எருசலேம் நகரத்தில் இருந்தும் வந்த பரிசயேர்கள், வேதபாரகர் மற்றும் நியாயாயசாஸ்திரிகள் வந்திருந்தார்கள் (லூக். 5:17).
4. விளக்கவுரை
இயேசு கிறிஸ்து முடக்குவாதமுற்றவரை குணமாக்குவதர்க்கு முன்பாக அவருடைய பாவங்களை மன்னிகிறார். பாவத்திற்க்கும் நோய்க்கும் தொடர்பு உள்ளது என்பதை பழைய ஏற்பாட்டு நூல்கள் தெளிவாக விளக்குகின்றன (சங். 103:3). எனவே இயேசு முதலாவது முடக்குவாதமுற்றவரின் பாவத்தை மன்னிகிறார் (9:2). இதை கேட்டுக்கொண்டிருந்த பரிசயேர்கள், வேதபாரகர் மற்றும் நியாயாயசாஸ்திரிகள் பாவங்களை மன்னிக்கிறதர்க்கு இயேசு யார் என்கிற கேள்வி அவர்களுக்குள் எழுகிறது. ஏனென்றால் கடவுள் (யெகோவா) ஒருவரே பாவங்களை மன்னிக்கிறதர்க்கு அதிகாரம் உடையவர் என்பதுதான் யூதர்களுடைய நம்பிக்கை எனவே இயேசு செய்தது கடவுளுக்கு எதிரான செயல் என்று தங்களுக்குள் நினைத்தனர். ஆனால், வசனம் 6- இல் இயேசு கூறுகிறார் மனுஷகுமாரனுக்கு மனிதர்களுடைய பாவங்களை மனிக்கிறதர்க்கு அதிகாரம் உண்டு என்பதைக் இயேசு முடக்குவாதமுற்றவரை குணப்படுத்துவதன் மூலம் நிரூபிக்கிறார்.
5. கருத்துரை
இஸ்ரயேலில் தோன்றிய எந்தவொரு இறைவாக்கினரும் (தீர்க்கதரிசி) இத்தகைய செயலைச் செய்ததாக வேதத்தில் நாம் பார்க்க முடிவதில்லை .இயேசுவின் காலத்தைச் சேர்ந்த பல யூதர்கள், இயேசுவை மெசியாவாக பார்க்கவில்லை. இயேசு பாவங்களை மன்னித்ததாக கூறியதை, யூத சமயத்தலைவர்கள் தெய்வ நிந்தனையாக கருதினர். இவ்வுலகில் மானிட மகனாக தோன்றிய இயேசு கிறிஸ்து தமது இறைத்தன்மையை அதாவது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் தமக்கு இருக்கிறது என்று உலகிற்கு உணர்த்தும் விதமாக பாவங்களை மன்னித்தார். மேலும் தாம் இறைவாக்கினரிலும் மேலான ‘இறை மகன்’ என்பதை இயேசு தமது அற்புத செயல்கள் வழியாக நிரூபித்தார்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.
_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ்
(மேயேகோ)
0 Comments