Ad Code

இறைமைந்தரின் அற்புதங்கள்: நிறைவுரை • The Miracles of God's Son: Conclusion

1. தலைப்பு
இறைமைந்தரின் அற்புதங்கள்: நிறைவுரை 

2. திருமறை பகுதி
மாற்கு 7.37

3. இடம் & பின்னணி
மாற்கு நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவின் இறைப் பணிகளைக் குறித்து எழுதும் போது, அங்குள்ள மக்கள் கொடுத்த கருத்தை (Feedback) பதிவு செய்துள்ளார். கொன்னையும் செவிடுமான ஒரு மனுஷனை இயேசு சுகமாக்கிய பின்பு மக்கள் இந்த கருத்தை சொன்னததாக திருமறையில் வருகிறது. 

4. விளக்கவுரை
மாற்கு 7:37: அவர்கள் (மக்கள்) அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , "இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!" என்று பேசிக்கொண்டார்கள். 

கொன்னையும் செவிடுமான ஒரு மனுஷனை இயேசு சுகமாக்கிய பின்பு மக்கள் இந்தக் கருத்தை சொன்னாலும், இந்த ஒரு அற்புதத்தை மாத்திரம் வைத்து மக்கள் இந்தக் கருத்தை சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை. அதற்கு முன்பு இயேசு செய்த அற்புதங்கள் குறித்து மக்கள் அறிந்து வைத்திருந்தது உண்மை. நற்செய்தியில், இன்னும் பதிவு செய்யப்படாத அற்புதங்கள் உண்டென்று யோவான் சொல்லுகிறார்: (யோவான் 20:30): "வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை." 

இயேசு அற்புதங்கள் செய்தபோது, ஜனங்களின் மத்தியில், பெற்றோரின் முன்பாக, சீஷர்கள் முன்பாக என்று பல்வேறு சூழ்நிலைகளிலே செய்ததை வாசிக்கிறோம். தனியே அழைத்துச்சென்று அற்புதம் செய்ததையும் வாசிக்கிறோம். ஆகிலும், இயேசு எவ்வளவு கண்டிப்பாகக் கட்டளை கொடுத்தாரோ, அதற்கும் அதிகமாக ஜனங்கள் நடந்ததைப் பிரசித்தம்பண்ணினார்கள். எல்லாவற்றையும் நன்றாய் செய்தார் என்று ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர்.

5. கருத்துரை
இயேசு கிறிஸ்து எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதை நேர்த்தியான முறையில், மக்களுக்கு பயன்படும் வகையில் செய்தார். நம்முடைய வாழ்விலும், இறை சித்ததிற்கு நம்மை ஒப்புக்கொடுக்கும் போது, எல்லாம் நன்மைக்கேதுவாக நடைபெறும். அவர் எல்லாவற்றையும் அதின் அதின் காலத்திலே சரியாக செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
அற்புதரான இறைமைந்தரின் இறையாசி நம்மோடிருப்பதாக. ஆமென்.

_____தியானம்______
யே. கோல்டன் ரதிஸ் 
        (மேயேகோ)

Post a Comment

0 Comments