Ad Code

உலக இரத்த தான தினம் World Blood Donor Day

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 அன்று உலக இரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது. பாதுகாப்பான இரத்தம் மற்றும் பிளாஸ்மாவின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்களைக் காக்கும் தன்னார்வ இரத்தக் கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இரத்த வகைகளைக் கண்டறிந்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இத்தனம் அனுசரிக்கப்படுகிறது.

 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் (WHO) முதன்முதலில் இத்தினத்தை அறிவித்தது.இரத்தப் பற்றாக்குறையைப் போக்கவும், தேவைப்படும் நோயாளிகளுக்குத் தடையின்றி இரத்தம் கிடைப்பதை உறுதி செய்யவும் இது உதவுகிறது.

ஆரோக்கியமான நபர் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக இரத்த தானம் செய்யலாம்.

Post a Comment

0 Comments