Ad Code

மத்தேயு (சீடர்) Matthew • Bible Characters

திருமறையில் யார் இவர் யாரோ? - 15 
மத்தேயு: பின்பற்றி வா 

1. பெயர்: மத்தேயு (சீடர்) Matthew/ லேவி
2. அர்த்தம்: கடவுளின் பரிசு

3. சிறுகுறிப்பு: 
• மத்தேயு கப்பர்நாகூமில் வரி வசூலிக்க அமர்ந்திருந்தபோது இயேசுவால் அழைக்கப்பட்டார்.
• புதிய ஏற்பாட்டின் முதல் நற்செய்தி நூலான "மத்தேயு எழுதின நற்செய்தி" நூலை எழுதியவர் இவரே. 

4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
சமூகம் இவரை "பாவி" என்றும் "துரோகி" என்றும் ஒதுக்கி வைத்திருந்த நிலையிலும், இயேசு இவரைத் தேடி வந்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார்.மத்தேயு உடனடியாக தன் லாபகரமான தொழிலை, பணத்தை, வசதிகளை அப்படியே விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்.

5. வேதாகம பகுதி (வாசிக்க): 
மத்தேயு 9: 9-13 (மத்தேயுவின் அழைப்பு)
லூக்கா 5: 27-32 (மத்தேயு இயேசுவுக்கு விருந்தளித்தல்)

இறையாசி
உங்களோடிருப்பதாக...

மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915

தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

Post a Comment

0 Comments