யோவான்: கொள்கை வேறுபாட்டில் விசாரணை
1. பெயர்: யோவான் (ஆசாரியன்) John / Jonathan
2. அர்த்தம்:
கர்த்தர் கிருபையுள்ளவர்
Hebrew: Yohanan
3. சிறுகுறிப்பு:
• அன்னா, காய்பா ஆகிய பிரதான ஆசாரியர்களோடு பிரதான ஆசாரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
• வேதாகமத்தின் சில கையெழுத்துப்பிரதிகளிலும் சரித்திர குறிப்புகளிலும், இந்த யோவான் என்பவன் பிரதான ஆசாரியனாகிய அன்னாவின் குமாரனான யோனத்தான் (Jonathan) எனக் குறிப்பிடப்படுகிறான்.
• எருசலேமில் அப்போஸ்தலர் பேதுருவும் யோவானும் பிரசங்கித்ததை எதிர்த்து, அவர்களை விசாரிப்பதற்காகக் கூடிவந்த யூதத் தலைவர்கள் மற்றும் தலைமை ஆசாரியர்களின் குடும்பத்தினரில் இவரும் ஒருவராவார்.
4. கற்றுக்கொள்ளும் ஒரு பாடம்:
இவரும் இவருடன் கூட இருந்த பிரதான ஆசாரிய குடும்பத்தினரும் அநேகமாக சதுசேயர் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தனர்.
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலை இவர்கள் நம்பவில்லை. அதனால்தான் பேதுருவும் யோவானும் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்த இந்த ஆசாரியர்கள் அவர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். இது நியாயமற்ற செயலாகும்.
5. வேதாகம பகுதி (வாசிக்க):
அப்போஸ்தலர் 4.6
இறையாசி
உங்களோடிருப்பதாக...
மேயேகோ.இன் திருமறை தியானம்
9486810915
தினமும் இந்த செய்தியை வாட்சப்பில் பெறலாம்.

0 Comments